பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ரோஜா இதழ்கள்

மின்றி முடி நுனியில் தேய்ந்து கூழை பாய்ந்திருந்தாலும், கண்களிலும் சிரிப்பிலும் இளமையின் கவர்ச்சி கட்டவிழ்த்துக் கொண்டு பெருமை பாடுகிறது. மூக்குப் பெரிசு; கன்னம் தேய்வு; உடம்பும் தேய்வு. ரிப்பனை நாகரிகமாக அடி மண்டையை வழித்துக் குதிரைவால் நாகரிகமாகக் கட்டி இருக்கிறாள்.

“யாரக்கா இது?...” அவள் மைத்ரேயியைச் சுட்டிக் காட்டிக் கேட்கிறாள்.

“மைத்ரேயி, உள்ளே வாம்மா, உங்காமா நினைச்சுக்கோ ....”

குஞ்சு குழந்தைகளெல்லாம் அவளை ஏதோ அதிசயத்தைப் பார்ப்பதுபோல் பார்க்கின்றன.

அவளுடைய கையிலுள்ள பையை அப்போதே பிடுங்கிச் சோதனை போடத் துடிக்கிறான் எட்டு வயசுப் பையன்.

இந்தக் குழந்தைக்குத் தேங்காமிட்டாய் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறாள், மைத்ரேயி.

“ஏண்டி, சீனு எங்கே?”

“அவன் வந்து அப்பவே சட்டை போட்டுண்டு வெளியே போயிட்டான் அக்கா!”

“நீ என்ன பண்ணினே? உலையைப் போட்டு ஒரு சாதத்தைக் கொதிக்கவச்சு ஒரு குழம்பு பண்ணறதுக்கென்ன?”

“என்னமோ அஞ்சும் பத்தும் அடுக்கா வச்சிருக்கறாப் பல பேசறியே?” மதுரம் அவளை உறுத்துப் பார்த்துக் கொண்டு குரலை இறக்கி, “அவங்கிட்ட அரிசி வாங்கிண்டு போன்னு சொல்லி அனுப்பிச்சேனே? மூட்டை கொண்டு வரல?”

“மூட்டையில் என்ன இருந்தது. நாலஞ்சு எரி மூட்டையும் இலைச் சருகும்தான்”

“அடப்பாவி! நாலுபடி அரிசியையும் அஞ்சு தேங்காயையும் என்னடி பண்ணினான்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/76&oldid=1101902" இலிருந்து மீள்விக்கப்பட்டது