பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

81

வறையைப் பெருக்குகிறாள். பிறகு எல்லோருடைய பீங்கான், அலுமினிய உண்கலங்களையும் தேய்த்து அலம்புகிறாள்.

டப்பா நீரை இரண்டு பையன்களும் சேர்த்துத் தூக்கி வருகின்றனர். வாளியில் பொம்மி நீர் கொண்டு வருகிறாள். மதுரம் மாமி குவளையில் கறிவேப்பிலை மிதக்கும் மோரும், ஒரு தையல் இலையுமாகத் திரும்பி வருகிறாள். தணல் கருகிச் சாம்பல் பூத்த அடுப்பில் இரண்டு சுள்ளியைச் செருகி விட்டு இரும்புச் சட்டியைப் போட்டுக் குப்பியில் வாங்கிவந்த கடலெண்ணெயை ஊற்றுகிறாள். பப்படங்களைப் பொரிக் கையில் குழந்தைகள் சந்தோஷமாய்க் குதிக்கின்றனர்.

“உக்காரு மைத்தி...” என்று தையல் இலையைத் துடைத்து அவளுக்குப் போடுகிறாள்.

புழுங்கலரிசிச் சோறு. வெங்காய சாம்பாரின் மணம் ஊரைத் தூக்குகிறது. குழந்தைகளுக்கெல்லாம் இரண்டிரண்டகப்பை என்று அளந்தாற்போல்தான் அவள் அன்னமிடுகிறாள். சொக்குவும், ஜிட்டுவும் ஒருவர் கலத்தை மற்றவர் பார்த்துக்கொண்டு சமம்தான் என்று அமைதியடைகின்றனர். சூணாவயிற்றுக் குழந்தை தனக்கு இரண்டுகரண்டி வேண்டும் என்று கேட்கும் போலிருக்கிறது. மதுரம் கால் கால் கரண்டியாக இரண்டு தடவை படைக்கிறாள். பிறகு இரண்டு இரண்டு கரண்டி சாம்பாரைச் சோற்றின்மேல் ஊற்றிவிட்டு அடுப்பில் காயும் எண்ணெயில் பொரித்த பப்படங்களை, ஒவ்வொன்றாக எடுத்துப் போடுகிறாள்.

சொக்கு ஆவிபரக்கும் குழம்பைப் பார்த்துக்கொண்டே துளித்துளி விரலில் தொட்டு நாவில் வைத்துக் கொள்கிறான். இன்பத்தை எவ்வளவு நேரம் நீட்டிக்கொண்டு போகமுடியும் என்று பார்க்கிறான். சொர்ணம் தட்டை ஆட்டி ஆட்டி, சோற்றைக் கிளறி விரைவில் பிசையப் பார்க்கிறாள். அதற்கு மூன், “துளி எண்ணெய்விடேண்டி, அக்கா?” என்று கேட்கிறாள்.

அடுப்பில் காயும் எண்ணெயிலிருந்து ஒரு துளி சோற்றில் தெளிக்கும் மதுரம், “நீதான் இந்தக் கலகமெல்லாம் ஆரம்பிப்பே. நீ கேட்டால் இப்ப எல்லாம் கேக்காதா?...”

ரோ.இ-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/83&oldid=1101920" இலிருந்து மீள்விக்கப்பட்டது