பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

85

"போலீசா நின்னுது. அன்னிக்குத்தானே?”

“அப்ப ரத்தக்கண்ணீர் போட்டாரு. அது நல்லாயிருக்கும் ஐயிரம்மா. இப்ப அதில்ல. இது வேற டிராமா. முந்தா நா அண்ணா வேசம் கட்டின சந்திரமோகன் பார்த்தேன் ராமாவரத்திலே. அதும் ரொம்ப நெல்லாயிருந்தது ஐயிரம்மா .”

அப்பாவு கையைக் கழுவிக் கொண்டு வாயிலுக்குச் செல்கிறான். அவன் செல்லும்போது சொர்ணத்தின்மீது ஒரு கபடப் பார்வையை வீசிட்டுப் போகத் தவறவில்லை.

வாட்டசாட்டமாக இருக்கிறான்-அரைகால் சராய்க்கு மேல் நீலக்கோடு போட்ட சட்டை; தலையில் முண்டாசு கட்டிக் கொண்டிருந்தான் உள்ளே செல்லும்போது; வரும் போது இல்லை.

இவன் லாரியில் வரும் கிளீனரோ, டிரைவரோ? அல்லது வேறு சிறு தொழில் செய்பவனோ? கிட்டத்தட்ட இவனைப் போன்ற ஒருவனுடன்தான் அவள் உறவு கொண்டாள். தனராஜ் கவிஞன் என்று வைத்துக் கொண்டாலும் நெருங்கலான ஆள். மதுரம் மாமி இவனுக்குச் சோறிடுகிறாள். சொந்தக் குழந்தைகளிடம் இருந்த கண்டிப்புக் கறார் தன்மையை இவனிடம் காட்டவில்லை. வாலிபத்தின் கிளர்ச்சியில் மட்டும் சாதித் தடைகள் அகன்றுவிடுகின்றன என்பதில்லை; வறுமையிலும்கூட வேற்றுமைகள் கரைகின்றன. சட்டியில் பொங்கிய இவளுடைய புழுங்கலரிசிச் சொற்றையும் குழம்பையும் மேற்குலத்தான் உண்ண வரமாட்டான்; இவளைப் போன்று வறுமையில் உழன்றாலும் வரமாட்டான்.

அம்மணியம்மாளின் வீட்டில் நிகழ்ந்த கூட்டத்தில், அவளுடைய மனசில் சுருக்கென்றுதைக்க நிகழ்ந்த பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அவற்றில் நியாயம் காணக்கூடிய ஆர்வத்தை அவளிடம் தோற்றுவித்திருக்கின்றன.

அப்பாவு சென்றபின் மதுரம் கொஞ்சம் சோற்றை வைத்துக் கொண்டு உண்ணுகிறாள். பிறகு சற்றே தலையைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/87&oldid=1101929" இலிருந்து மீள்விக்கப்பட்டது