பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

87

பொறக்கறதுக்கு முன்னியே சொன்னா. இப்ப ஒரொரு சமயம் கேட்காத போயிட்டமேன்னுதான் தோண்றது. அப்பவே ‘சேவா ஹோம்’ ஆரம்பிச்சாச்சு. அங்கியே கூட எனக்கு வேலை கிடைச்சிருக்கும். இப்பக்கூடத்தான் ஒவ்வொரு சமயம் இல்லாம திண்டாடறப்ப, கடைசித்தையானும் கொண்டுச் சேர்க்கலாமான்னு தோணறது. அப்புறம் அப்பனும் அம்மையும் கல்லுப்போல இருக்கச்சே, அவா எடுக்கறேன் னாலும் விட மனசு வரல. இருந்தாலும், இவருக்கும் வாய் அதிகம். இன்ன பேசலாம் கூடாதுன்னு கிடையாது...”

“நீ இப்ப சப்பைக்கட்டுக்கட்டி என்ன ஆகப்போறது? நீ வானா லோகநாயகி நாத்தனார் முறைன்னு சொல்லிண்டு திரியறே. அவ ஒண்ணும் சொல்லிக்கமாட்டா...”

“அவ இன்னி வரைக்கும் என்னை வாய் நிறைய மன்னின்னு தான் கூப்பிடுவாளாக்கும். அவ என்ன செய்யலே? மூணுதரம் ஓட்டல் வைக்க முதல் கொடுத்தா. நஷ்டம் வராம என்ன செய்யும்? ஊரில் இருக்கிறவனுக்கெல்லாம் கடனுக்குச் சோறு போட்டுச் சத்திரம் நடத்தினா ஓட்டலாவா இருக்கும்? ஓட்டல் போச்சு, கடை வச்சுப்பிழைன்னா, அதுவும் உருப்படல. தின்னு உருட்டினது போறாம கஞ்சாவும் சேர்ந்ததுதான் மிச்சம். என் தலையெழுத்து. இந்தப் பிள்ளையானும் படிச்சு முன்னுக்கு வருமாக்கும்னு ஆசைப்பட்டேன். அப்பனுக்குப் பிள்ளை தப்பாமன்னு ஆயிருக்கு. ஓட்டல்ல காபி ஆத்தினாலும் ஒழுங்கா வேண்டாமா? நம்ம கடமை, பிராமணனாப் பொறந்ததால ஒரு நூல் மாட்டணும். எங்கெங்கெல்லாமோ தர்மப் பூணூல் (போடறா. நமக்கென்னதெரிகிறது? அவ காதிலதான் எல்லாம் போட்டு வைக்கணும். சின்னதை அழைச்சிண்டு ரெண்டு நான் போய் இருந்துட்டு வரலாம்னா, பட்டணம் போயிட்டு வர ரெண்டு மூணு ரூபாயாகும்....” என்று நிறுத்தும் மதுரம் மத்ரேயியைப் பார்க்கிறாள்.

மைத்ரேயிக்குச் செவிகள் தேன் கிண்ணங்களாக மாறினாற் போலிருக்கிறது. “ஆமாம், நீயுந்தான் இந்தக் ‘காட்டன் ஆட்டத்தில்’ ஒருநாள் கூரையப் பொத்துண்டு விழப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/89&oldid=1101933" இலிருந்து மீள்விக்கப்பட்டது