பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரத்தை எதிர்நோக்கி நிலைமைதனைச் சமாளித்தோம்; போர் முனையோ பின்னணிக்குள் பொத்தென்று சரிந்து விழ, சிறுதுளியாய்த் தொடங்கியது சினந்தபெரு வெள் ளமெனப் பெருகிவர, எம்.டகு பேரலையால் எற்றுண்டு சாய்ந்து விடும்போலும் சந்தர்ப்பம் தோன்றியது; 4.jசாய்ந்துவரும் வில்ஹெம்மின் பாதுகையோ நிக்கோலஸ் பாதுகையை மிஞ்சியதோர் பலம் படைத்த காரணத்தால், மோதி மிதித்துவிடும்! நாடுதனை முற்றாகத் தூள்புரப்பிச் சுடுகாடாய்ச் சுட்டுப் பரப்பிவிடும்! வேளை கெட்ட வேளைய தில்--- விரைந்தோடும் வீரர்களை, சிறுபிள்ளைத் தனமான செயல்மிகுந்த எஸ், ஆர்,கள் 40 அறிவற்ற வார்த்தைகளை அள்ளி வலைவீசிப் பிடிப்பதற்கு வந்தார்கள்; இரும்பணிந்த பேய்க்குலத்தை அடிப்பதற்கும் ஒழிப்பதற்கும், அசகாய பராக்கிரம இடிபாட்டுக் குவியலிலே கிடந்தே எடுத்திட்ட உடைபட்ட கத்திகளை உருவிக் கொடுத்தார்கள்!