பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொற்றிவந்த நோய்நொடியும், பஞ்சமுமே தொடக்கிவைத்த முற்றுகைக்கு முன்னாலே, துப்பாக்கி முனை விடுத்து வீறிட்டுப் பாய்ந்துவந்த குண்டுதந்த வேதனையோ நூ றிலொரு பங்கில்லை!- என்றே நுவன்றிடலாம். பாருங்கள்! ரொட்டிக்காய்ப் பறந்துவரும் ஈக்கூட்டம் பாருங்கள்! ஒரு துண்டு ரொட்டிக்காய்ப் பலநாட்கள் கொல்லும் பளிக்குளிரில், க்யூவரிசை தனில் நாங்கள் அல்லும் பகலும் நின்று அவதிகளும் அனுபவித்தோம். மிகப்பெரிய கப்பல்கட்டும் தளமொன்று வேலையற்றுச் சிகரெட்டைப் பற்றவைக்கும் தீப்பொறிக் காய்உழைக்கும் காட்சியினைக் கணநேரம் கற்பனை யில் காணுங்கள்! அவரையெலாம் சிறையிலிடு ! தூக்கிலிடு! சிரச்சேதம் செய்துவிடு! இல்லையெனில், தினம் செத்து வருகின்ற தொழிலாளர் வயிற்றுக்கு வழி ஏது? குலாக்குகளோ4 '2 அளப்பரிய வெண்ணெயினை', 105.