பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடைசாய விருந்த கப்பல் - கொடிமரம் போல் நிமிர்ந்தெழுந்து, தடைகடந்து துறைமுகத்துள் தருக்கோடு நுழைந்ததுகாண் உடனேயே புயலெல்லாம் ஓய்ந்த துமோர் அதிசயம்தான்! வேண்டுமட்டும் ரொட்டிகளை விவசாயப் பெருமக்கள் கூண்டுவண்டி தனிலேற்றிக் கொண்டிருந்தார். வாசல்தொறும் “என். இ. பி. * 19, விற்குமிடம், வாங்குமிடம் என்றெல்லாம் கண்ணில் விளம்பரங்கள் கச்சிதமாய்ப் பட்டன்காண். "செப்பனிடை. முனைந்து விட்டோம்; சிறிதுமினிப் பயமில்லை. தப்பின்றி அளந்தறியத் தான்கற் றுக் கொள்ளுங்கள்" என் று லெனின் கண்சிமிட்டி எமக்கூக்கம் தருகின்றார். என்றாலும், கரைநீரோ இளைத்துக் களைத்து, லம் சோர்ந்திருந்த மாலுமியர் 'தமக்கோர் தூளியைப்போல் நேர்ந்து மெல்வசைந்து நின்ற துவே. அதனாலே, "காற் றுமில்லை! இந்நிலையில் கப்பலினை ஓட்டென்று - சாற்றுவதில் அர்த்தமென்ன ?* என்றவர்கள் சித்திட்டார். 10g