பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடியின் கீழ் அவர் திரண்டு கோஷமிட்டு வருகின்றார். படிப்படியாய்க் கரைந்துவரும் ஏகாதிபத்தியமும், பணக்கார வர்க்கம்தும், பாருலகைத் துன்புறுத்தித் தனதாட்சி தனை யின்னும் சாதித்து வந்தாலும், ஞானிலெனின் பெற்றெடுத்த ஞானப் புதல்வனளத் தானிலங்கும் சோவியத்துக் குடியரசின் சாதனைக்கு மரியாதை யோடுதலை வணங்குவதும் காண்கின்றோம், அரிய பெரும் முயற்சிகட்கும், அனுதினமும் பணக்காரர் திருக்கூட்டம் செய்துவரும் சூழ்ச்சித் தி நங்களுக்கும் அஞ்சாது, புகைத் திரளை அள்ளி யெறிந்தே நம் இஞ்சின் தலைதெறிக்கும் வேகத்தில் ஏ குதுகான், இந்நிலையில்- திடுமென்று இடிவிழுந்து தீய்த்தாற்போல், நாங்களெல்லாம் கிடுகிடுக்க, நடுநடுங்க, செய்தியொன்று கேட்டதுவே. மாமேதை லெனினவர்க்கு. மாரடைப்பாம்... 11.