பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனியாணை இட்டார்கள், என்றாலும்--- எம்முடைய கொதித்துக் கனன்றெரிந்த தொண்டைக் குழியிருந்து குதித்துவந்து, சொல் மூன்று குலவையிட்டு ஒலித்தனவே; “கம்யூனிசம் வாழ்க! 5 13 அந்நாள்- ஜனவரியில் இருபத்தி இரண்டாம் நாள்: அந்நாளில் சோவியத்துக் காங்கிரசின் அவைகூடும் மண்டபத்தில், உருக்கினைப்போல் வலிமையினை நெஞ் சகத்தே கொண்டிருக்கும் தலைவர்பலர் கூடத் தொடங்கிவிட்டார். வரிசை வரிசையென வருகைதந்த அவரெல்லாம் பிரச்சினைகள் பல்குறித்தும் பேச்சுக் கொடுத்தவராய், கிண்டல் உரையாடிக் கிளுகிளுத்துச் சிரித்தவராய் மண்டபத்தில் வந்தமர்ந்தார்......

  • ஆரம்ப மாவதற்கு

அவர்கள் குறித்திருந்த நேரமும்தான் ஆயிற்றே. தாமதமேன்? 'நில்லுங்கள்! 137