பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடலம் குலுங்கியதே! உலகெல்லாம் சுற்றியதே! அகமகிழ்வோ நத்தையைப்போல் அசமந்த மாய்நகரும்; மிகுதுயரோ புயலைப்போல் வெறிபிடித்து மேலோங்கும், பகலோனில் ஒளியில்லை, பனிக் கட்டித் துண்டுகளோ தகதகத்து ஒளிரவில்லை. சஞ்சிகைகள் எல்லாமும் அட்டைக் கரிகிறத்தில் அவலச் செய்தியதைக் கொட்டிக் கவிழ்த்துலகைக் குலைநடுங்கச் செய்தனவே! பாட்டாளி மக்களர்தம் மூளைக்குள் அச்செய்தி தோட்டாவைப் போற் பாய்ந்து ' துளைத்துருவிப் பாய்ந்ததுவே! பணியாற்றும் தொழிற்சாலைப் பட்டறையின் கருவிகளை நனைத்தாங்கே கண்ணீரும் நதியாய்ப் பெருகியதே! தேர்வில் நொம்பலத்தில் நூறுமுறை பதப்பட்டும், சாவைப் பலமுறைகள் சந்தித்தும் பார்த்திட்ட ஏருழவன் தன் மனைவி | முகமதனை" ஏறிட்டு நேர்நின்று நோக்குதற்கும் நெஞ்சிலுரம் அற்றவனாய்ப் பார்வையினை மாற்றி நின்றான். ஆனாலும் பாவையவள் - 121