பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரித்தார்! மரித்துவிட்டார்! மரிக்கவில்லை என்று மினி உரைப்பதிலே பயனுண்டோ ? சவப்பெட்டி உள்ளுக்குள் கண் மூடி அவர்கிடக்கும் காட்சியினைப் பெட்டியதன் கண்ணாடி வழியாகக் காண்பதுவும் பொய்யாமோ? பவலெத்ஸ்கி ரயில் நிலையம் தனிலிருந்து படைவீரர் அவரையன்றோ சுமந்து வந்தார்! அவர் செல்வ ரிடமிருந்து விடுவித்துத் தந்த நகர் வீதிகளின் வழியவர்தம் சடலத்தைத் தானன்றோ . தாங்கி எடுத்துவந்தார்! வீதியெலாம் வெட்டுண்டு விரிந்துபட்ட காயம்போல் வேதனையால் வாய்புலம்பி வெந்து குமைந்ததுவே. அக்டோபர் புரட்சியதன் ஆரம்பத் தாக்குதலின் கெக்கலியை, . காலடியைக் கேட்டுத் தெரிந்திருந்த - - - பாதையதன் சரளைக்கல், ஒவ்வொன்றும், பார்புகழும் மேதை லெனின் தனைக்கண்டு விம்மிதமும் உற் றதுண்டே ! 123