பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேர்நின்று ஒரு நிமிடம் நிலையான உண் மையினைக் கூர்விழியால் பார்ப்பதுபோல் கொடுகையிதைப் பார்த்து விடு! அணிவகுப்பின் காதலிசை ஆற்றுப் பெருக்கினிலே இனிதே மிதந்து செலும் இன்பம்போல், என்னுடம்பு பளுக்குறைந்து காற்றாகிப் பறப்பதுபோல் மகிழ்ச்சியிலே களிக்கின்றேன். இந்நிமிடம் காலமெல்லாம் என்னுள்ளே ஒளிபரப்பும்; இன்றைக்கும், என்றைக்கும், ஒருக்காலும் அழியாது வாழ்ந்துவரும்:- என்பதனை அறிவேன்யான். இந்நாளின் பேரணியில் பானும் ஒருவனென்ற எண்ணத்தால் மகிழ்பொங்க் எக்களிப்பு எய்துகின்றேன், கண்ணீரும் எமக்கிடையே பொதுவுடைமைப் பொருளாகும். மண்ணகத் தில் நாங்கள் ஒரு வர்க்கம் எனும் அந்தப் பொன்னா 68, - , மகத்தான, புனித உணர்வான 132