பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தையும் ஆணித்தரமாகப் புலப்படுத்த 32.தவும் கருவியாகவே கருதினர். இதன் விளைவாக, இவர் தமது தாய்மொழியின் அழுத்தமான ஒலிக்குறிப்புக்களையெல்லாம் புதுப்புதுத் தாள் லயங்களையும், கவிதை வடிவங்களையும் உருவாக்கப் பயன்படுத்திக் கொண்டார்; இந்த முயற்சியில் இவர் புதிய புதிய சொற்சேர்க் கைகளையும் புகுத்தினார். பேச்சு வழக்கில் சொல்லுக்குள்ள வலுவையும் அழுத்தத்தையும் மரபிலக்கண வரம்பை மீறியும், பிரதிபலிக்கும் சாதனையாகவே இவரது கவிதை இருந்தது . இத்தகைய வடிவத்தை இலக்கிய விமர்சகர்கள் Accentuial verse-- அர்த்தபாவ அழுத்தக் கவிதை -- எனக் கூறுகின்றனர். உதாரணமாக, நாம் பேசுகின்றபோது, பேசுகின்ற விஷயத்தைப் பொறுத்தும். அதனை வலியுறுத்தும் தன்மையைப் பொறுத்தும், சில சொற்களுக்கு அழுத்தம் கொடுக்கிறோம்; சிலசமயம் எதி ரொலியை எதிர்பார்ப்பதுபோல் சில விநாடிகளுக்கு ஊமையாக வும் மாறுகிறோம். அந்த மெளனமும்கூட அத்தகைய சமயங்களில் வார்த்தைக்கில்லாத வலுவோடு பேசுவதை உணர்கிறோம். இவ்வாறு பேச்சு வழக்கில் சொல்லில் ஏற்றப்படும் தொனி அழுத்தம் - Conversational into13tio - தான் இத்தகைய . கவிதையின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது ; இதற்கு வலுவும் வனப்பும் அளிக்கிறது. இந்தப் புதிய அற்புதமான கவிதை வடிவம் சொல்வதற்காகவே எழுதப்படுவதாகும். எனவே மயாகோவ்ஸ்கியின் கவிதைகள் எல்லாம் நாம் தனித்திருந்து, அதுவும் மனத்துக்குள்ளாகவே வாசிப்பதற்காக எழுதப்பட்ட கவிதைகள் அல்ல. அவ்வாறு நாம் மனத்துக்குள்ளாகவே வாசிக்க முனைந்தாலும், மகாகோவ்ஸ்கியே நம்முன் வந்து நின்றுகொண்டு தமது கவிதைகளை இடிக்குரலில் முழங்கும் உணர்வும், அதனை நாம் வியந்து கேட்டுக்கொண் டிருக்கும் உணர்வும்தான் நமக்கு ஏற்படும், மயாகோவ்ஸ்கியின் வாழ்நாட் காலத்தில் இவரது கவிதைகளை இவரே கூறுவதைக் கேட்க, ரசிகப்பெருமக்கள். வெள்ளம் போல் திரண்டு வரத் தவறியதில்லை, இந்தக் காரனாத்தினால்தான். இவர் தமது கவிதைகளை அச்சேற்றிய காலத்திலும், அவற்றை எப்படி வாசிக்க வேண்டும், எங்கெங்கே அழுத்தங்கள், நிறுத்தங்கள் கொடுக்க வேண்டும். என்பதைப் புலப்படுத்தும் வகையிலேயே அவற்றை வெளியிட்டார், இந்தத் தமிழாக்கத்திலும் நான் கூடியவரையில் அந்த முறையையே கையாண்டுள்ளேன். - முனைந்தாள்,தைகளை இக்கொள் மயாகோவ்ஸ்கியின் இத்தகைய புதிய பாணிக் கவிதை நேர்முகமாக 'வாசகரோடு பேசும் தன்மையினாலும், அவ்வாறு பேசும்போது வெளிப்படும் காம்பீரிய கதியினாலும், கனல்