பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பையனைப்போல் வரிக்குவரி! பயந்தெழுதி வருகின்றேன், ஐயன் அவன் தலைமீது அருள்வட்டப் பிரபை (யொளி வளையமிடக் கூடாதே! வளை யமிட்டு, ஞானவொளிக் களைபொலியும் மானிடராம் லெனினவர் தம் அகல் நுதலை ஒளித்துவிடக் கூடாதே! ~ என்றென்னுள் உணர்கின்றேன். ' கொளுத்துகின்ற நறுமனத்துத் தூபங்கள், ஊர்வலங்கள், கல்லறை கள், கருமாதிக் காரியங்கள், சடங்கினங்கள் எல்லாமும் சேர்ந்தவன்றன் எளிமைதனை மறைத்திடுமோ?- எT னவஞ்சி , கண்மணியை இமைகாக்கத் துடிதுடித்து முனைவதுபோல் நடுங்குகிறேன்.. மூதறிஞன் லெனினவனைப் போலியெழில் அலங்காரப் பொருளாக்கி, பொய்யாக்கிக் கேலிசெய்யக் கூடாதே !-- என்றுள்ளம் கிளர்கின்றேன் . எழுதடா எழு திவிடு!- என்னிதயம் இவ்வாறு அழுத்தமுடன் சொல்கிறது, கடமையிட்ட ஆனைதனைத் தொழு து தலைவணங்கி எழுதத் தொடங்கிவிட்டேன்; -19