பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூனல் விழுந்துட லம் குறுகி மெலிந்தவராய்த் தான்நின்ற தொழிலாளர் தம்மனணியில் திரண்டுவந்தார். புகைக்கும் கூண்டுகளைப் பூண்டோடு பேர்த்தெறியும் வகை காண்போம், அவற்றையெலாம் வானுயர விட்டெ, றிவோம் என்றவர் கள் அப்போதே அச்சுறுத்தி எச்சரித்தார்: வளமார்ந்த பொன் திரட்ட வழிபார்த்து, நீரெம் மைத் தளமாக்கிக் கொடுமை செய்து தருக்கு கின்றீர். என்றாலும், நினைவில் வைத்திருப்பீர்; அவன் விரைவில் நெருங்குகிறான்! மனிதனவன், ' ' வீரனவன், பழிவாங்கும் மறலியவன், போர்விளைக்கும் சூரனவன் பிறந்துவரப் போகின்றான்!” எரிபுகையும் கருமுகிலும் ஏற்கெனவே ஒன்றாகி வரிசையிட்டுப் படைக்குலம்போல் . அணிதிரண்டு வருகிறதால், ' கடும் புயலின் அறிகுறிகள் ' 'காணுகின்ற வேளை வரின், நெடுவிசும்பும் இரண்டு படும்- நெருப்புப் பு ைசுச்சுருள்கள் முகிற்குலத்தின் மூச்சடைக்க' மூண்டெழுந்து மேலேறும்.