பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதித்தெழுந்து வந்திடுவார்! உம்மையெலாம், அவ்வீரர் புத்தகங்கள் தனிலிருந்து போர்க்களத்தின் திசை நோக்கி வைத்த அடி பிசகாயல் வழிகாட்டிச் சென் றிடுவார்! என்றவர்தாம் வழிகாட்டி. எடுத்துரைத்தார். இவ்வாறு அன்றவர்தம் கரம்நடுங்க அந்திமத்து வாசகத்தை எழுதுகின்ற வேளையிலே- யான றிவேன்- மார்க்ஸ் அவர்தாம் பாரீசுக் கம்யூனின் பதா 60: கயது, கிரெம்ளினின்மேல் ஏறிப் பறப்பதனை ஏறிட்டுப் பார்த்துவிட்டார் பழம்போல் வருடங்கள் பழுத்துக் கனிந்து வர, இளம்பிள்ளை யாயிருந்த தொழிலாளி இனமதுவும் வளர்ந்தோங்கிப் பெரிதாகி வாலிபனாய் மாறியதால். கிளர்ந்தெழுந்த தொழிலாளர் கிளர்ச்சி பல நாள்தோறும் அலைபோலே பொங்கியெழ, மூல தனம் அதனின் மலைபோன்ற கற்கோட்டை மதிற்சுவர்கள் கலகலத்து அதிர்ந்தனகா ன்! மானிடர்தம் 1.1ரிணாம் ஆவேசம் 49