பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 னி சிறக்கும் உண்மை யெலரம் நன்றாகத் தெரிந்திருந்தான். எனக்கு சைபிரிய உழவர்கள் தம் கதையொன்றும் நினை வுக்கு வருகிறது: நிலத்தை அவர் பறித்தார்; பங்கிட்டார்; பாடுபட்டார்; பயிர் வினைத்தார் ; பசிபோக்கும் தங்கச் சுரங்கமெனத் தான்யாறச் செய்து விட்டார். லெனின்பற்றி அவர் களெலாம் ஏதும் அறிந்ததிலை; எனினும், அவர்க ளெலாம் லெனினிஸ்டாவத் தானிருந்தார். மலைகளுக்கும் சென்றிருந்தேன்--- மண்டி வளர் புதர்கள் அங்கு வளரவில்லை; முகில்கள் மட்டும் மலைமுகட்டில் தவழ்ந்தளவே. பல நூறு மைல்கடந்து மலையேறிப் பார்க்குங்கால் மலைமீது ஒற்றைக்கோர் மனிதனைத்தான் நான் கண்டேன் , மந்தைகளை மேய்க்குமந்த ' மனிதன் தன் சட்டையினில் சொந்தமொடு லெனினுருவ பாட்ஜொன்றைத் தரித்திருந்தான்.

  • 'குண்டூசி, தனையுடையில்,

- குத்துவதோர் அதி சயமோ? பெண்டுகளும் தம்மழகைப் பெருக்கிக் காட்ட வொரு 53