பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திண் ணமிகும் சாட்டையினால் திரும்பத் திரும்ப அடி கொடுத்ததனால் மேனியெலாம் கறுத்துக் கோடிட்டுத் . தடித்ததுபோல் பல நதிகள் தடம்பதித்துத் தாளுேடும். நிலப்பிரபு! வர்க்கத்தார் நித்தநித்தம் மக்கள்தமைக் குலையுயிராய்க் குற்றுயிராய் அடித்துதைத்த கொடுமையினால் விழுந்திட்ட தழும்புகளோ நதிகளையும் விடக் கறுப்பாய் அழுந்திக் காட்சிதரும், அக்கால ரஷ்யாவை எத்திசையில் நின்றே நீர் எவ்விதமாய்ப் பார்த்தாலும் அத் திசைகள் எங்க மே~- வானை அளந்து நிற்கும் மலைகளையும், சிறைகளையும், அரங்கத்தின் பளு தூக்கி நிலைகளையும் காண்பீர்கள். என்றாலும், நித்த நித்தம் ஆலைகளின் பட்டறையில் அரும்பாடு பட்டுழைத்து வேலை செய்த தொழிலாளர் வாழ்வதுவோ, - வெங்கொடுமைச் , 'சிறைசுளையும், பதுங்குகுழிச் சேற்றுக்குள் . போர்புரியும் 55