பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை பாலகாணல்கண்காடி-பயாடியமமாககாணடியனாயனமாடியலைப்டாபயமைகிமாயாபக க எண்ணுக்கே தெரியாத கடுகுப் பொடியனிலன்! என்றாலும் -- சின்னஞ் சிறு இதயம் சிரித்துத் துடி துடிக்க என் ளமாய் இப்பொடியன் இளைக்காது முயல்கின்றான்!* என்றே க திரவனும் எனை நோக்கி வியந்திருந்தான்... நேசிக்கிறேன்” என்ற கவிதையில் கவிஞர் விளதிமிர் மயாகோவ்ஸ்கி தமது பிள்ளைப் பருவத்தைப் பற்றி இவ்வாறு நினைவு கூர்கிறார். இவரது வாழ்வையும் வாழ்வில் இவர் காட்டிய தாகத்தையும் வேகத்தையும் அறிந்தவர்கள் எவரும், அந்தப் பொடியனைக் கண்டு, கதிரவனும்கூட வியப்புற்றுப் போனதில் பொருளுண்டு என்றே கூறத் துணிவர். 1893 ஜூலை 7 அன்று ஜார்ஜியாவைச் சேர்ந்த பக்ததி என்ற குக்கிராமத்தில், வனப்பாதுகாவலர் ஒருவரின் மகனாகப் பிறந்த (மயாகோவ்ஸ்கி ' பிள்ளைப் பருவத்திலேயே தந்தையை இழந்து விட்டார். பின்னர் பிழைப்பை நாடி மாஸ்கோவுக்குக் குடி பெயர்ந்து வந்த இவரது குடும்பத்துக்கு, அங்கு வறுமைதான் காத்திருந்தது. இந்த வறுமைக்கிடையிலும் இவர் 1808-7. ஆண்டுகளில் பள்ளியில் 1!டித்து வந்தார். அந்தப் பதின்மூன்று வயதுப் பருவத்திலேயே இவருக்குத் தத்துவ விசாரணையிலும், மார்க்சிய அரசியலிலும் மிகுந்த நாட்டமும் தேட்டமும் ஏற்பட்டு விட்டன. இதன் விளைவாக, இவர் ரஷ்ய சோஷலிஸ்டுக் கட்சியில் சேர்ந்து ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார். விரை விலேயே - ரகசியப் பிரசுரங்களை எழுதிக்கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைதானார். ஆயினும் தமது சாமர்த்தியத்தினால் அதிலிருந்து தப்பி விடுதலையானார். எனினும் சிறைக்குள்ளிருந்த பெண் கைதிகள் சிலரைத் தப்பித்து ஓட: உதவியதற்காக இவர் மீண்டும் கைதானார்; சிறைத் தண்டனையும் பெற்றார். அப்போது இவருக்கு வயது பதினைந்து. சிறைவாசத்தின்போது இவர் தமது