பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊசி விழும் போதெழும் பும் ஒலிகூட, தனியொரு வன் பேசுகின்ற குரலதனால் பிறந்து விடுவதில்லை, பேசிடினும், அவன் பேசும் பேச்சைக் கேட்பவரார்? ஆசை மனை வியவள்- , அவளும்தாள் கடை பழிக்குப் போகாது, ஒருவேளை புருஷன் அருகிருந்தால்,-~ ஆகா வென் றவன் பேச்சை அகமகிழ்ந்து கேட்டிடலாம். என்றாலும் - கட்சியொன்று எழுப்புகின்ற ஒலிய துவோ, குன் றி மெலிந்தொலிக்கும் குரல்பலவும் ஒன்றாகித் தீர!ட்சியுற்று, ஒரேகுரலாய்த் திமிர்த்தெழுந்து, வீசிடுமோர் புரட்சிப் பெரும் புயலின் இடிமுழக்கம் போலொலிக்கும், இடி முழக்கம் அது கேட்டால், எதிரியரின் கோட்டையெல்லாம் வெடிமுழக்கம் செய்கின்ற ... பீரங்கி - வேட்டதலைக் கேட்டுக் கிறுகிறுத்துக் . கிழிந்துபடும் செவித்துறை போல் ஆட்டங்கள் கண்டாங்கே ஒருவன் மட்டும் நிலைகுலைவான்; ஒழிக்தோம் எணவுணர்வான்; 67