பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றாலும்- சக் கையினைத் துப்பி ஈ றிந்தாற்போல், அந்தப் பரம்பரையை, அரசப் பெரும்பவிசை, சந்ததமும் அனுபவித்த சட்ட உரிமைகளை மூட்டோடு பேர்த்தெறிந்து முடி த்திட்டோம். என்றாலும், வாட்டும் பசிப்பிணியால் வாடி மெலிவுற்று, புண்ணுடம்பில் செங்குருதிப் பொருக்காட, . உழைச்சேற்று - மண்ணிருந்து கரையேறி வெளிவந்த நாடு, தன்னை மீட்டும்முத லாளிகட்கே விற்றுமுத லாக்கிடுமோ? நாட்டை சோவியத்தாம் நல்வழியில் போக்கிடுமோ? ““ஜாராட்சி விலங்குகளை மக்களெலாம் தறித்திட்டார்.. ஊராட்சி காண்பதற்கு உறுத் தெழுந்து பொங்கிவிட்டார்! எங்கும் ரஷ்யாவில் - பெருநெருப்பு எரிகிறது! - பொங்கும் அனல் வெள்ளம் பொக்குளித்துப் பாய்கிறது." என்கின்ற செய்திகளை ஸ்விஸ் நாட்டில் அந்நாளில் தங்கி யிருந்தலேனின் சஞ்சிகையில் 23டித்தறிந்தார்.