பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேனாதி பதிகளெலாம் செந்நிறத்து ரிபுளோடும், பட்டாளத் தலங்காரப் பகட்டான உடையோம் வட்டமிட்டுக் கும்லென வந்திட்டார். சில அடிகள் எட்டி வைத்து முன்வந்தால், வஞ்சரவர் எல்லையினைத் தொட்டிடுவார்: அதன் பிறகு தொடங்கிவிடும் வெறியாட்டம்! முதலாளிக் கும்பலதோ முதுகெல்லாம் மயிர்சிலிர்த்துக் குதுகுதுக்க, கைகளெலாம் குறுகுறுக்க, வெறியாடித் தீர்ப்பதற்குத் தயாராகித் தினவெடுத்து நின்றதுலே. பார்ப்பதற்கு, இது முதலில் பரிகாசத்துக் குரியதொரு சிறுசெயல்போல் தெரிந்தாலும், சீக்கிரமே மிகப்பெரிய சுறாமீன் கள் நாட்டினையே விழுங்கிவிடத் துணிந்தனவே. அடுத்து, தார்தனெல்ஸ்கி 27, அவர் பின்னே மணிமுடியை1 ) எடுத்தானியத் துடித்தவராய் இராவரசர் மிகைல் வந்தார். பிரதமரோ அநாயாசப் பெருமிதத்தோ டாட்சியினைப் புரிகின்றார்: தளபதிகள் ஒருவருமே புகைந் துறுமக் 33.