பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலுக்குள் தூக்கி எறியுங்கள்! என்று அதில் அவர்கள் எழுதியிருந்தனர்! உண்மையில் இந்த இளைஞர்களை இலக்கிய உலகின் கலகக்காரர்கள் என்றே சொல்லாம். இந்தக் கலக்க வெறியில் பிறந்த ஆவேசம், இத்தனை காலமும் கூட்டுப் புழுவைப் போல் தூங்கிக்கிடந்து உள்ளுக்குள் வளர்ச்சி பெற்று வந்த மயாகோவ்ஸ்கியின் கவிதா சக்தியைச் சிறகடித்துப் பறக்கச் செய்துவிட்டது! ஆனால் பழமையான கலைகளை முற்றிலும் மறந்துவிட்டும் துறந்து விட்டும். சுத்த சுயம்புவான, தான்தோன்றியான கலை யையோ இலக்கியத்தையோ எவரும் படைத்துவிட முடியாது. அது அஸ்திவாரமில்லாமலே கோட்டை கட்ட நினைப்பதற்குச் சமமாகும். மனிதகுலம் பரம்பரை பரம்பரையாகப் படைத் தளித்துள்ள சிந்தனையையும் மரபையும் ஜீரணித்துக்கொண்டு, அதன் மூலம் ஜீவசக்தியும் பெற்றுக்கொண்டு இலக்கியம் படைக்க முனைபவனே உண்மையில் புதுமையைச் சாதிக்கமுடியும். இந்த உண்மையை உணராது, பழைய இலக்கியத்தில் தான் கற்றுக் கொள்வதற்கு எதுவுமே இல்லை என்ற தகப்பன்சாமி மனோபாவத்தோடும் அகம்பாவத்தோடும் இலக்கியம் படைக்க முனைபவன் எவனும் இலக்கிய முயற்சியில் பரிதாபகரமான தோல்வியடைவதுடன்கூட, தன்னுக்குள் தானாய்த் தானுக்குள் எல்லாமாய்ச் சமாப்தியாகிவிடும் தனிமனிதத்துவப் புதை மணலிலும் ஆழப்புதைந்து, அழுவாரும் தொழுவாருமின்றி அழிந்து போய்விடுவான். நல்ல வேளையாக, மயாகோவ்ஸ்கி மானிட சமுத்திரத்திலிருந்து தம்மைத் தாமே பிரித்து, சுண்டி, வற்றிச் சுவறிப்போய்விடும் துளியாக மாறிவிடவில்லை. பழைய இலக் கியங்களை இவர் வெறுத்தபோதிலும் மறுத்தபோதிலும், இவர் மானிட சாகரத்தில் தம்மைத்தாமே கரைத்துக் கொள்வதில் தான் தமது வலிமையை இனம் கண்டார். பழைய இலக்கியங்களைத் தாம் தாக்கியதற்குக் காரணம் என்ன என்பதையும் இவர் பின்னொரு சமயம் இவ்வாறு விளக்கினார்; பழைய கவிதைக் கலையை நான் பலமுறை தாக்கிப் பேச நேர்ந்ததுண்டு. இதற்குக் காரணம் பழமை4ான கவிதைக் கலைமீது நான் ஏதோ பகைமை கொண்டிக்கிறேன் என்பதல்ல. அந்தக் கலை ஒரு பயமும் அறியாதது. நான் தாக்கியதற்குக் காரணம் இதுதான்: பழைய பாணியை ஆதரிப்பவர்கள் புதிய சுலையை எதிர்த்துப் போராடுவதற்காக, பெரிய மனிதர்களின் நினைவுச் சின்னங்களுக்குப் பின்னால் மறைந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முனைகின்றனர். எனவே அந்த நினைவுச் சின்னங்களைத் தட்டி நொறுக்கித் தள்ளுவதன் மூலம் இத்தகைய பெரிய மனிதர்களது முற்றிலும் மூடிமறைக்கப்பட்டதை புறக்