பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமேதை லெனினவர்தாம் பின்லாந்தில், ரஜ்ஜீவில் சிறுகுடிசை ஒன்றினுள்ளே சிலகாலம் மறைந்திருந்தார். சிறுகுடிசை என்றாலும், வலைவிரித்துத் தேடிவந்த வெறிபிடித்த நாய்களுக்கு வீரமகன் லெனின் தம்மைக் காட்டிக் கொடுக்காது காத்தது காண்! அதனாலே - நாட்டுக்குள் லெனின் இருந்தார்; நம்மருகே அவரிருந்தார்! கண்மறைவாய் வாழ்ந்தாலும் கண் ணுறங்க நேரமுண்டோ ? மண்ணுலகில் காலமதும், வரலாறும் நின்றிடுமோ? ஒலித்துவந்த கோஷங்கள் ஒவ்வொன்றும் லெனின் குரல்தான்! வழித்துணையாய் கைகாட்டி வந்ததுவும் லெனின் கரம்தான்! செழுநிலத்தில் தேடிவந்து சிந்தியதோர் வித்தாங்கே முளைத்தெழுந்து வளர்வதுபோல் மூதறிஞன் லெனின் புகலும் வாசகங்கள் ஒவ்வொன்றும் லட்சியத்தை வளர்ந்தோங்கித் தேசுபெறச் செய்துவிடும் சேதி அறியோமோ? பாருங்கள்! லெனினிஸ்டுப் பாட்டாளி மக்களொடு சேர்ந்து நிற்கும் விவசாயத் திருக்கூட்டம், சேனை யென்