பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருமத்தை , பொதுவுடைமைச் சகாப்தத்தை உருவாக்கும் பாதையினை முதன்முதலில் பாரகத்தே தோற்றுவித்த மேதை லெனின் திருவுருவே மேலோங்கித் தென்படுமால். வறுமைத் துயர் மலிந்த வருடங்கள் இவையாவும் இறந்தொழியும்; காலமெனும் இருட்டில் ஆழ்ந்துவிடும், கூட்டுடைமைக் கம்யூனின் இளவேனில், குவலயத்தின் வாட்டம் தனைப்போக்கி வாழ்வளிக்கும், தெம்பூட்டும்! செந்நிறஞ்சேர் அக்டோபர் மலர்க்குலத்தின் சினைத்தாது இந்நிலத்தில் ஆனந்த வாழ்க்கையெனும் இன்கனிபாய்ப் பருத்துத் திரண்டுருண்டு பலனளிக்கும். அந்நாளில் திருத்தமுற லெனினவர்தாம் தேர்ந்துரைத்த ஆனைகளைப் படிப்பவர்கள் பழுப்பேறும் பக்கங்கள் தமைப்புரட்டி முடிப்பதற்குள், இதயத்தில் மூண்டெழுந்து பொங்கிடுமோர் உணர்ச்சியினை, என்றைக்கோ உலர்ந்துவிட்ட கண்ணீரும் கணப்பொழுதில் கண்களிலே கசிவதனைக். காரம், பார்கள். 91