பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருசமயம் போர்வீரன் ஒருவன் மேல் அவர் கண்கள் சுருக்கென்று கத்தியைப்போல் அளீரென்று பாய்ந்ததனை, இதயத்தைக் கிடுக்கியிட்டுப் பற்றி இழுப்பதனை, பதங்களுக்கும் சொற்களுக்கும் அடியில் பதுங்கியுள்ள ஆன்மாவைத் தொட்டுவார்ந்து வெளிக்கொணரும் அறிவதனை நான் கண்டேன்! விவசாயி, போர்வீரர் முதலானோர் வேதனையாய்த் தவித்தெதனை எதிர்நோக்கித் தானிருந்தார் என்பதனை, பாட்டாளி மக்களோடு கப்பற் படையினரும் கூட்டமிட்டுக் காத்திருக்கும் குறிப்பதனை, அக்கண்கள் தேர்ந்தும், தெளிந்தறிந்தும், திட்டவட்ட மாய்ப்புரிந்தும், ஓர்ந்தும் கொண்ட தென்ற உண்மையினை நானு ணர்ந்தேன், மாலைக் கதிர் முளைக்கும், கங்குல் திரபடர்ந்து மாலைக் கதிர்மறையும் மண்ணுலகின் கண்டங்கள் அனைத்தினையும், மக்கள்குலம் அனைவரையும், அவர்தம்முள் "95