94 வகுப்புரிமைப் போராட்டம் னுக்கென்று சொல்லி வாங்கும் பொருள்களைக் கொண்டுதான் 'தாசி'யையும் திருப்திப்படுத்துகி றார். மடாதிபதி, மக்கள் கண்ணிலும் கருத்திலும் விபூதியைத் தூவியே, அர்த்த நாரீசுவர வடிவை அர்த்தராத்திரியிலே எய்துகிறார். இவ்வளவும், இன்னும் பலவும் அவர்கள் பெற்றுள்ள தகுதியா லும், நடைபெறுகின்றன. திறமையாலுமே 'தகுதி திறமை' என்பதற்காகவே இவைகளை அனுமதித்துக்கொண் டிருப்பதாக எந்த அரசாங் கமும் சொல்ல முடியாது. அப்படிச் சொன் லோ அந்த அரசாங்கம் பின்னும் நெடுநாள் நிலைக்க முடியாது. எனவேதான், பல சமூகங்கள் தாழவும் சில சமூகங்களே உயரவுமான நிலைமை எதன் பெயரால் நிலைநாட்டப்பட்டாலும் அதைத் தகர்த்தெறிந்து சம சந்தர்ப்பம் கிடைக்கும்படிச் செய்வதே, அரசாங்கத்தின் முக்கியவான முதல் கடமையாகின்றது. இத் தகுதியும் திறமையும் கவனிக்கப்படாமல், சமசந்தர்ப்பம் தந்து நம்யூனல் ஜி. ஒ. படி மாண வர்களைச்சேர்த்ததால் என் ஜினியரோ,டாக்டரோ ஆனபின்பு, அவர்கள் கூறும் 'தகுதி' இல்லாத தால், எத்தனை பேர் தமது கடமையைச் செய்ய வில்லை என்றாவது கூறமுடியுமா? அதன்படி வந்த என் ஜினியர் கட்டிய பாலங்களிலே எத்தனை பழுதா கிவிட்டன? அந்த டாக்டர்கள் கொடுத்த மருந்திலே எத்தனை பேர் பிழைக்கவில்லை? என் றாவது அத்திறமைசாலிகள் கணக்குக் காட்டு வார்களா ? சக்தியும் சூழ்நிலையும் மற்றும் 'சமசந்தர்ப்பம்' என்றால் ஏன் சாதி யைப் பார்க்கவேண்டும்? மார்க்கைப் பார்த்தால் தானே ஒவ்வொருவருக்கும் சமசந்தர்ப்பந் தந் தது ஆகும் என்றும் வாதிடுகின் றனர் சிலர்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/100
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
