தகுதியும் திறமையும் 95 சமசந்தர்ப்பம் என்றால், ஆளுக்கு ஆள் என்றுமட்டும் அர்த்தமல்ல. ஓட்டப் பந்தயமான லும் குதிரைப் பந்தயமானாலும்கூட, ஆளுக்குத் தக்கபடி, குதிரைக்குத் தக்கபடி, பலஹீனம் உடையவர்கட்குச் சலுகை காட்டி, சற்று முன்னே நிறுத்துவதுதான் வழக்கம். அதற்குப் பெயர் தான் சந்தர்ப்பம். அதைப் போன்றேதான், சமூ கத்திற்குச் சமூகம் வேறுபாடு உள்ள காரணத் தால் பிற்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கட்கு, அந்தச் சமூகங்களின் பலமற்றதன்மை அவர்க ளைப் பாதிக்காமல் சலுகை காட்டவேண்டியது அவசியமாகிறது. இல்லையானால் அவர்களுக்கு உயர் வகுப்பாரோடு சமசந்தர்ப்பம் கிடைப்ப தில்லை. இன்றைய சமூகத்தில் எந்த ஒரு மனிதனும், அவனுடைய வகுப்பை சாதியைவிட்டு அறவே நீங்கியவனாக இல்லை. எவனும் மனத்தால் நீங்கி னாலும்கூடச் சூழ்நிலைக்கு ஆட்பட்டே தீருகிறான். அதிலும் 'தகுதி' பெற்றவர்களோ, அந்த சாதி, வகுப்பின் உருவாகவே உலவித்தான் அத்தகுதி யைப் பெற்றுள்ளனர். மற்றவர்களும், அவரவர் பிறந்து வளர்ந்த சாதி-சூழ்நிலையை ஒட்டியே தான் அந்தந்தத் தகுதியைப் பெற்றுள்ளனர். எவருமே அவரவர் சாதியை, சூழ்நிலையை ஒட்டி யல்லாது தனியாக மனிதர்கள் என்ற முறையிலே மட்டுமல்ல, 'தகுதி' - 'திறமை' பெற்றிருப்பது. இ நாட்டில்தான்.மக்கள் (மனிதர்களாக) இல்லையே; சாதிகளாகத்தானே உள்ளனர். எனில் சாதிக ளுக்கிடையில் தானே சமசந்தர்ப்பம் கிடைக்கச் செய்யவேண்டும், உண்மையில் சமசந்தர்ப்பம் நிலவவேண்டுமானால். இங்கு இத்தகுதியைப் பெறக் காரணமாக இருப்பது, தனிப்பட்ட ஆட்களின் திறமையை
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/101
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
