பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 96 வகுப்புரிமைப் போராட்டம் விட, சாதிகளின், சூழ்நிலையின் ஏற்றத்தாழ் வைப் பொருத்தே அமைகின்ற காரணத்தால், ஒரு நாட்டார் என்பதற்காகச் சமசந்தர்ப்பம் ஆட் களிடை வழங்குவது, ஒரே காட்டில் உள்ளவை என்பதற்காகப் புலியையும் மானையும், ஒரே நீர்த்துறையில் தண்ணீர் குடிக்க விடுவதைப் போலவே யாகும். புலியும் மானும் ஒரே நீர்த் துறையிலும் பருகி, வலிவற்ற விலங்காகிய மானும் கரையேற வேண்டுமானால், இடையே உயரமான இருப்புவேலி போடுவது அவசியமாவதைப் போலத்தான் வகுப்பு வீதாச்சாரம் செய்யப்பட் டுள்ளது உண்மையில் சமசந்தர்ப்பம் என்பது தனிப் பட்டவர்களுக் கிடையில் சமசந்தர்ப்பம், சூழ்நிலை யால் வேறுபட்ட வகுப்புக்களுக் கிடையில் சமசந் தர்ப்பம், தராதரத்தில் வேறுபட்ட மாவட்டங் களுக்கிடையில் சமசந்தர்ப்பம் என்று எல்லாவற் றையும் சேர்த்துக் குறிப்பிடுவதேயாகும். ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் வருகின்ற பல வகுப்பாருக்கும், அந்தந்த வகுப்பில் அதிக தகுதியுடையவர்கட்கு இடம் கிடைக்கும்படிச் செய் வதே சமசந்தர்ப்பமளிப்பதாகும். பிற இவ்வாறு கவனிக்காவிடில்-சென்னை மாகா ணத்திலேயே தஞ்சை திருச்சி மாவட்டத்தினர் பெறுகின்ற இடத்தில் நான்கிலே ஒரு பங்குகூட, இராயலசீமா, இராமநாதபுரம் போன்ற போக்கு நிலைக்கு ஆளாகிவிட்ட மாவட்டத்தினர் பெறமுடியாதநிலை, மேலும் பின்னால் தள்ளப் படும் நிலை ஏற்படும் என்பதை யாரும் மறுக்கத் துணியார். இனி, சமசந்தர்ப்பம் அளிப்பது என்பது இப் படிக் கட்டுப்பாடுகள் செய்வதல்ல என்றும், தகுதி