பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதியும் திறமையும் 97 யுடையவரே தழைக்க (Survival of the fittest) இடம் தருவதே முறையென்றும் சொல்லப்படு மானால், யார் யார் எந்தெந்த விதத்தில் 'தகுதி' பெற்றுள்ளனரோ அந்தந்த முறையைக் கொண்டு வாழ வழிதேடிக்கொள்ள முயல்வர். மூளையினால் தகுதி பெற்றுள்ளவர்கள் வாழ்வு பெறுவது உரிமையாதல் போலவே, உடலினால் 'தகுதி' பெற் றுள்ளவர்கள் அதைக் காட்டிலும் வாழ்வு பெறு வதும் உரிமையேயாகும், அறிவு பலம் சிலருக்கு என்றால் ஆள்பலம் சிலருக்கு; தந்திரத் 'தகுதி சிலருக்கு என்றால் தோள் வலி பலருக்கு என்ற எண்ணமும், அதைக் கொண்டு வாழ்வு தேடும் முறையும் பிறக்கும். அந்நிலை, ஜனநாயகத்திற்கு, குடியரசுக்குப் பொருந்தாது. எனவேதான் சந்தர்ப்பம்' என்ற சொல்லைக் கொண்டு நீதியை வீழ்த்துவது ஆபத்து என்பதை 'அவர் கள் உட்பட அனைவரும் உணர வேண்டுகிறோம். காரணம் என்ன ? சம சமூக மற்றும்,இன்றுள்ள நிலைப்படி, 'தகுதியை மட்டுமே பார்த்தால், அதில் உயர் தகுதி பெற்றுள் ளவர்களில், நூற்றுக்கு மூன்றுக்கும் குறைவாக உள்ள பார்ப்பாரே நூற்றுக்கு அறுபது எழுபது பேர்களாக இருப்பதற்குத்தான் என்ன? காரணம் எப்படி இந்த ஒரே வகுப்பார் மட்டும் அவ் வளவு அதிக 'தகுதி ' பெற முடிந்தது? பிரம்மனின் முகத்தில் தோன்றியவர் என்ப தாலா? பூதேவர் வர்க்கம் என்பதாலா? வியாசர், வசிஷ்டர், வால்மீகி பரம்பரை என்பதாலா? முப் புரி தரித்த மார்பினர் என்பதாலா? மஞ்சள் நிற மேனியினர் என்பதாலா? நான்கு வேதங்களைப் 7