.98 அதை வகுப்புரிமைப் போராட்டம் எண் பெற்றவர் என்பதாலா? பதினெண் புராணங் களைக் கட்டியவர் என்பதாலா? பாரத இராமா யணத்தைப் போற்றுபவர் என்பதாலா? சமஸ் கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்பதாலா? புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டவர் என்பதாலா? வர்ணாஸ்ரம (அ) தர்மத்தைத் தோற்றுவித்து, சாதிக்கொரு தொழிலென மக்களை ஒப்புக்கொள்ள வைத்து, ஒப்பாமல் மக்கள் புரட்சி ணம் கொள்ளாமல் இருக்க மூடநம்பிக்கைகளையும் பொய்க்கதைகளையும் புகுத்தி அறிவை அடிமைப் படுத்தி, எவரேனும் அதற்கு மாறாகப் புரட்சிசெய் தால் அடியோடு ஒழிக்க மனு (அ) நீதியை வகுத்து அதை அரசுகளெல்லாம் ஏற்று நடக்கச் செய்த காரணத்தாலல்லவா, அந்நாள் எதையோ நெட் குரு செய்யக் கிடைத்த வாய்ப்பும் வசதியும் இன் றளவும் தொடர்ந்து பெருகி, அவர்களின் தகு தியை உயர்த்தக் காரணமாகியுள்ளது. இந்தப் பரம்பரை வாய்ப்பும் காரணமல்ல, ன்றுள்ள சூழ்நிலையும் காரணமல்ல வெனில், பிராமணர்களின் - பொதுவான 'தகுதி' எப்படி உயர முடிந்தது? "பிராமண சாதியின் மகத்து வம்" என்று பதில் சொல்ல 'அவர்கள் ' முன்வந் தால் - நமக்குத் தெரியுமே-உணவு விடுதியில் தட்டுக் கழுவும் பார்ப்பனர் முதல் பைத்தியம் பிடித்துத் திரியும் பார்ப்பனர் வரை பலரை. அவர் களுக்கு ஏன் "அந்த பிராமண ஜாதியில் பிறந்த தால் உள்ள மகத்துவம்" இல்லாமற் போயிற்று? எனவே அவர்களின் 'தகுதி' பிராமணப் பிறவி யாலல்ல என்பதும், பரம்பரையாக அனுபவித்த வாய்ப்புக்களாலும் இன்று பெற்றுள்ள வாய்ப்புக் களாலுமே அமைகிறது என்பதும் மறுக்கமுடி யாதனவாகும்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/104
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
