தகுதியும் திறமையும் 99 அப்படியானால், மற்றவர்களுக்கு இன்று வாய்ப்பளிக்க மறுக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, பரம்பரையாகவே, 'அவர்களின்' தர்மத்தின் பெய ரால் நீதியின் பெயரால், மறுத்து வந்திருக்கிறார் கள். மற்ற வகுப்பார்கட்கு அறிவுக்குச் சிறிதே னும் வேலையுள்ள படிப்புத் துறையில்- சமசந்தர்ப் பம் அளிக்காமல் செய்திருக்கிறார்கள் என்பது மட் டுமல்ல, சந்தர்ப்பமே இல்லாமல், இடமே வைக்கா மல் செய்துவந்துதான் இன்று 'இத் தகுதியைப்' பெற்றுள்ளனர். இதை நிறைவேற்றித் தந்த சமூகச் சட்டத்துக்குப் பெயர்தான் வர்ணாஸ்ரமம்; நிலநாட்டிய நீதிக்குப் பெயர்தான் மனுதர்மம்; அதைத் தாங்கி நின்ற இனத்திற்குப் பெயர்தான் 'ஆரியம்'; அதன் பலனை உறுஞ்சியவர்கட்குப் பெயர்தான் 'பிராமணர்கள்.' அதனால் வஞ்சிக்கப் பட்டு துரோகமிழைக்கப் பட்டவர்கள்தான், 'இத 'ராள்' (சூத்திரர் முதலியோர்.) சமூகத் துரோகம் இவ்விதம் கல்வி மணம் கூட மற்றவர்கள் நுகராதபடி கவனித்துக் கொண்ட உத்தமர்களின் வழிவந்தவர்கள்தான், மக்கட் சமு தாயத்துக்குப் பெரும் துரோகம் இழைத்தவர்கள் தான், அந்த வரலாற்றை மக்கள் அறியாத கார ணத்தால், அந்தப் பெருங் கொடுமைக்கு எந்தச் சிறு தண்டனையும் பெறுமுன்பே 'சமசந்தர்ப்பம்' குறித்து வாய்கிழியக் கத்துகின்றனர். 'அவர்கள்' செய்த சமூக துரோகத்தை விசா ரித்துத் தீர்ப்பு வழங்கக் கூடிய மக்கள் ‘நீதி மன் றம்' ஏதேனும் இருக்குமானால், "இன்னும் நூறு ஆண்டுகளுக்கேனும் பார்ப்பனர்கள், எந்தப் புத்த கத்தையும் கையினால் கூடத் தொடக் கூடாது. தொட்டால் தண்டனை. மனுநீதியில் சூத்திரருக்கு வழங்கப்பட்டிருப்பதை ஒப்ப வழங்கப்படும்.'
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/105
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
