100 வகுப்புரிமைப் போராட்டம் என்றுதான் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்க இடமுண்டு. ஆனால், 'அவர்கள்' பெற்ற இலாபமும் பயனும், மற்றவர்கள் அடைந்த கொடுமையும் பயமும் ஒரு புறமிருக்க, அந்கொடுமை இன்னும் களையப் படா மல் இருக்கும் போதே, அடிபட்டு மூர்ச்சித்தவன் முகத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கும் போதே, 'ஆண்டவன் கட்டளை' என்று சொல்லி அவனை அடித்து வீழ்த்தியவன், மறுபடியும் 'தகுதி' என்று சொல்லித் தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டதைப் போன்றுள்ளது இன்றைய நிலை. அதுமட்டுமன்றி, 'திறமையும் தகுதியும்' மட் டுமே கவனித்திருந்தால், இன்று ஆளவந்தார்கள் அமர்ந்துள்ள ஆட்சிப் பீடத்திலே யெல்லாம் கூட, ஆங்கிலேயரேதான் இருக்க வேண்டும். இது நமது ஆசையல்ல, ஆனால் உண்மை. உரிமையை மதிக் கும் மாண்பு சிறிதேனும் ஆங்கிலேயர்களிடத்தில் இருந்ததால்தான்,"ஆயிரம் உண்டிங்கு சாதி எனில், அந்நியர் வந்து புகுவதுதானே நீதி” என்று பதிலுக்குக் கூடக் கேட்காமல், "ஆகஸ்டு 15 ஆட் டம் " நடத்த இடம் தந்து விடைபெற்றுக் கொண் டனர். அவர்கள் விவேகிகளானதால். அதுபோன்றே, சகல துறைகளிலும் இடம் பெற்று வாழும் உரிமை, உண்மையிலேயே "தகுதி யும் திறமையும்" குறைந்தவர்களானாலும், தனித் தனி வகுப்பாக, பிரிவாக, இனமாக உள்ளவரை யில், அவர்கள் எவரானாலும் அவர்களுக்கு உண்டு. அந்த உரிமையை ஆளவந்தார் யாரானாலும் புறக் கணிக்க முடியாது. ஆப்பிரிக்காவிலே உள்ள இந்தியருக்கும், மலேயாவிலே உள்ள தமிழருக்குங்கூட நீதியின்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/106
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
