பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதியும் சிறமையும் V21.9 N NS 101 படி பார்த்தால் அவ்வுரிமை உண்டு என்றால், தமிழ் நாட்டிலே உள்ள தமிழருக்கு, திராவிடத் திலே உள்ள திராவிடருக்குத், தாய்நாட்டிலே உள்ள சொந்த மக்களுக்கு எப்படி அந்த உரிமை இல்லாமற் போய்விடும்? வேண்டுமானால், இதன் னாட்டிற்கு உரியரல்லாதாராக, இங்கெங்கிருங்கோ வந்தவர்களாக வரலாற்றால் தெரிவிக்கப்படுகின் வர்கட்கு அந்த உரிமை இல்லாமற் போகலாம். அதற்கு வேண்டுமானால் உதாரணமும் காட்ட லாகும். அந்தநிலை இங்கு வேண்டாம். 110 500 ஒரு காலத்தில் 'யூதர்கள்' என்ற ஒரு கூப்ட் தார் ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாட்டிலே யும் பரவலாயினர். ஆதிக்கமும் செலுத்தத் தொடங்கினர். பல துறைகளையும் கைப்பற்றிக் கொண்டனர். இந்நிலை ஜெர்மன் நாட்டிலே உச்ச நிலை யடைந்தது. புகழ் மிக்க டாக்டரானாலும், வக்கீலானாலும், பெரும் பொருள் படைத்த வியாபாரியானாலும், பாங்கரானாலும், மிக்க சம்பளம் பெறும் பேராசிரிய ரானாலும் உத்தியோகஸ்தரானாலும், எப்பக்கம் திரும்பினாலும், எவரிடம் தயவுக்குச் செல்ல நேரிட் டாலும் எல்லாம் யூதர்களாகவே இருந்தனர். ஏதோ ஒருவித தகுதியும் திறமையும் 'இன' ஒற் றுமையும் கொண்டே அவர்கள் அந்த உயர்நிலை பெற்றிருந்தனர். ஆனால் அந்தத் தகுதியேதான் அவர்கள் ஆதிக்கம் பெறக் காரணமானதுபோ லவே, அந் நாட்டிலே ஒரு ஹிட்லரைத் தோற்று விக்கவும், மக்கள் உரிமை உணர்வு பெற்றவுடன், யூதர்களை அந்நாட்டைவிட்டே விரட்டியடிக்கவும் காரணமாயிற்று.