பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வகுப்புரிமைப் போராட்டம் இதைப் போன்றே இன்னுஞ் சில நாடுகளி லும் நிகழ்ந்துள்ளன என்பது மட்டுமல்ல, ஆரிய இனத்தின் தகுதியிலும் திறமையிலும் உயர்வி லுமே நம்பிக்கை கொண்டு உலகையே நடுங்க வைத்த 'ஹிட்லரும்'கூட கூண்டோடு அழியத் தான் நேரிட்டது என்பதைத் தகுதியும் திறமை யும் கொண்டோர் மறந்திருக்க முடியாது. ஆனால் விரட்டப்பட்ட யூதர்கள்கூட, அந்நாட் டி லே செய்யாத அளவு 'தகுதி-திறமை' வாதம் இங்கு செய்யப்படுகின்றது. ஆனால் அதுவேதான், நீறுபூத்த நெருப்பைப்போலிருந்த மற்ற வகுப்பா ரின் உரிமை உணர்வை ஊதிவைப்பதாகவே முடி யும் என்பதை 'அவர்கள்' உணரவேண்டும். தங்க ளுடைய நாடு எது, எங்கிருந்து வந்தோம் என்ப தைத் தேடவேண்டிய தொல்லை ஏற்படக்கூடாது என்றால், சமூக நிலையை ஒப்புக்கொண்டு சமசந் தர்ப்பம் வழங்கவும், தாழ்ந்தவர்களை உயர்த்தவும், தாங்களும் மற்றவர்களைப் போல பாடுபடவும், 'சாதி எண்ணத்தை மனத்திலிருந்து நீக்கவும், தமிழ்ப் பண்பினராக மாறவும் முன்வரவேண்டும். அதுதான் காலத்தின் வேகத்தை உணரும் தகுதியும் மக்களின் உள்ளத்தை உணரும் திறமையும் 'அவர் களிடம்' சிறிதேனும் இருக்கின்றது என்பதற்கு அடையாளமாகும். கல்விக்கூடம், உரிமைப்பயிர் வளரும் வயல் அறிவுக் கழனி, அனைவருக்கும் பொதுவானது என்ற உண்மையை மறந்து, அதில் இடம்பெற அடிப்படையான தகுதி, குறைந்த அளவினதாக இருந்தால் போதும் என்பதைப் புறக்கணித்து உயர் ' தகுதி 'யுடையவர்கள் என்று சொல்லப்படு பவர்கட்கு இடம் பிடித்துத் தருவதாகச் சொல் லிப், பார்ப்பனருக்கு மேலும் இடங்கிடைக்க வழி