பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதியும் திறமைழம் 103 செய்தனர். அதனால், அக்கல்லூரிகளைப் போட்டிப் பந்தயக் கூடமாக, சகுனியின் சூது மண்டபமாக மாற்றினர். ஜனநாயக வெற்றி நல்ல வேளையாக அடுத்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் சட்டசபைக் கட்சித் தேர்தலில், பிர காசம் காரு தோல்வியடைந்தார். அவரோடு ' தகுதி- திறமை ' வாதமும் தோல்வியடைந்து ஜன நாயகம், வெற்றி பெற்றது. காங்கிரஸ் பார்ப்பன ரல்லாதாரும் பிரகாசம் மந்திரிசபையின் நடவடிக் கைகளினால்தான், கம்யூனல் ஜி. ஓ. வைக் குறித் தும், அதன் பயன் குறித்தும் ஓரளவேணும் தெரிந்துகொண்டு அதை ஆதரிக்க முன் வரலா யினர். எனவேதான், எதிர்பாராத விதத்தில் அதுவரையில் பதவி ஆசையின்றி ஒதுங்கி இருந்த ஓமாந்தூர் இராமசாமி (ரெட்டியார்) அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார். அதற்கு மாறாகப் பிரகாசம் மட்டும் மறுபடி யும் வந்திருந்தால், அவரே சட்டசபையில் சொல்லி யுள்ளபடி "கம்யூனல் ஜி. ஓ ' வைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கும் முயற்சியில் இன்னும் பல வற்றைச் செய்ய முயன் றிருப்பார் என்பதில் சிறி தும் சந்தேகமில்லை. 1945-ம் ஆண்டில் இருந்தே, பார்ப்பன ரல்லாத மக்களிலும் பின்னணியிலுள்ள வகுப்பார் தங்களு டைய உரிமைகளை உணர்ந்து அவைகள் காக்கப் படவேண்டும் எனக் கிளர்ச்சி செய்து வருவாராயி னர். பார்ப்பனரல்லா தவருள் சரிபாதி அளவுள்ள பின்னணி பார்ப்பனரல்லாதார் (Backward Non- Brahmins) அரசாங்க உத்தியோக மண்டலம், முதலியகல்வித் துறை, யாவற்றிலும் தங்க