104 வகுப்புரிமைப் போராட்டம் ளுக்கு நியாயமாக உரியபங்கினும் மிகக் குறைந்த அளவே இடம் பெற்றிருந்தனர். 'கம்யூனல் ஜி. ஒ' வின்படி பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கப் பட்ட இடங்களில், முன்னணி பார்ப்பன ரல்லா தாரே இடம் பெறவும் பின்னணியிலுள்ள வகுப் பார் கைவிடவுமே நேர்ந்தது. இதனாலேயே அவர் கள், கம்யூனல் ஜி. ஒ. வைத் திருத்தி, தங்களுக் கென இடம் ஒதுக்கும்படிக் கேட்டு வந்தனர். பிரகாசம் முதல் மந்திரியாக இருந்தபோது, கம்யூனல் ஜி. ஒ. வை, (நாளடைவில் கொல்லும் விதத்தில்) திருத்த முயற்சிப்பதாக அவர் கூறி யது, பின்னணி வகுப்பாரின் கிளர்ச்சிக்கு மேலும் ஆக்கந்தந்தது. பார்ப்பனர்கள்-- பிராமண சேவாசங்க மாநாடு கள் மூலம், இந்தக் கம்யூனல் ஜி. ஒ. வை எப்படி யேனும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதை வெளிப்படையாகப் பேசியும், தந்திரமாகச் செயல் புரியத் தூண்டியும் வருவாராயினர். திராவிடர் கழகம் முதலிய பார்ப்பனரல்லாத இயக்கத்தார், பார்ப்பனரல்லாதாருக்கும், பின் னணி பார்ப்பனரல்லாதாருக்கும் மக்கள்தொகைப் படியே உத்தியோகங்களில் இடம் கிடைக்கச் செய்யவேண்டும் எனவும், 'தகுதி- திறமை' பேரால், பொறி இயல், மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கும் சூழ்ச்சியை நீக்கவேண்டும் எனவும் அர சாங்கத்தை வற்புறுத்தி வந்தனர். பின்னணி வகுப்பாரோ, வன்னிய குலத்தினர் முதலியோர் ஆங்காங்கே ஒன்று திரண்டு- பலம் பெற்று, எந்த அரசியல் கட்சியானாலும், தமது வகுப்புரிமைக்காக அதனை எதிர்த்துத் தேர் தலிலே போட்டியிடுமளவுக்குமுன் வந்தனர். வெற்றிகளையும் பெற்றனர். பல
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/110
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
