106 கார் வகுப்புரிமைப் போராட்டம் திட்டமிட்டிருப்பது கண்டு, மகிழ்ச்சியடை கிறேன், எல்லா வகுப்பினருக்கும் சர்க்கார் சர் விஸ்களில் தகுந்த பிரதி நிதித்துவம் அளிக்கப்பட வேண்டுமென்பது நீண்டகாலமாகவே உணரப் பட்டு வந்திருக்கிறது. சென்னையில் அவ்வுணர்ச் சிக்கு உருவங் கொடுக்கப்பட்டது. அவ்வுத்தரவு முக்கிய வகுப்புகளுக்கான பதவி எண்ணிக்கையை யும், வரிசை முறையையும் நிர்ணயித்தது. இந்திய சர்க் காரும் இதனைப் பின்பற்றி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு மிடையே விகிதாசாரத்தை நிர்ண யித்தனர். திருவாங்கூர், கொச்சி சமஸ்தானங் களும் இதனை ஏற்று நடத்தின. இந்திய சர்க்கார் ஆக்டிலுள்ள இவ்வுத்தர வின் தத்துவத்தை பார்லிமென்டும் ஏற்றுக் கொண்டது. 255 (2) 266 (4) செக்ஷன் பிரிவு களும், சர்க்கார் பொது சர்விஸ் கமிஷன்களும் இவ்வுத்தரவை அமுலுக்குக் கொண்டு வரும்படி யாகப் பணிக்கப்பட்டுள்ளன. 1928-ல் நிர்ணயித்த விகிதாச்சார வரிசை முறையும் முடிவானவையல்ல. காலப்போக்குக் கேற்ப அவ்வப்போது மாற்றிக்கொள்ளும் வகை யிலேயே அமைக்கப்பட்டன. முந்திய வகுப்புகளின் மக்கள் தொகைக்கேற்பவே விகிதாசாரத்தை நிர்ணயிக்கவேண்டி யது முறையாகும். ஆனால், பல காரணங்களை முன் னிட்டு இம்முறை 1928-ல் கண்டிதமாகப் பின்பற் றப்படவில்லை. மிக மிகக் குறைவான பிரதிநிதித் துவம் பெற்றுள்ள வகுப்புகளுக்கே முக்கியத்து வம் கொடுக்கப்பட வேண்டுமெனக் கருதப் பட்டது. போதுமான எண்ணிக்கையுள்ள தேர்ச்சி பெற்றோர் இல்லாத வகுப்புக்களுக்கு (மக்கள் தொகையைப் பார்த்து) பிரதிநிதித்துவம் அளித்து
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/112
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
