தகுதியும் திறமையும் 107 விடுவதில் அர்த்தமில்லையென உணரப்பட்டது. உத்தரவுகளிலேயே இப்பிரதிநிதித்துவமிருக்குமே தவிர அமுலுக்குக் கொண்டுவர வாய்ப்பிருக்காது என உணரப்பட்டது. சர்க்கார் சர்விஸ்களில் நிறைந்த ஆதிக்கம் செலுத்தி அனுபவித்து வந்த வகுப்பொன்றின் விகிதாச்சாரத்தைக் கட்டுப் படுத்தி அதற்குத் திடீர் தாக்குதல் ஏற்படுத்திவிடக் கூடாதென்றும் கருதப் பட்டது. மற்ற வகுப்பி னர் தங்கள் தங்கள் விகிதாச்சாரத்தைப் பெற்று சமநிலைக்குவரும் அந்த,- ஆதிக்கம் செலுத்திய வகுப்புக்கு சர்விஸ்களில் பங்கு கொடுக்கக் கூடா தென்ற தீவிர எண்ணமுடையோரு மிருந்த கைகளி லேயே ஏற்பட்ட சமரசத் தன்மை அது. இன் றைய நிலை 1928-க்குப் பிறகு இப்பொழுது நிலை மையில் மாற்றமேற்பட்டிருக்கிறது. தற்போதைய சந்தர்ப்பத்துக்கேற்ப மாறுதல் செய்யவேண்டிய அவசிய மேற்பட்டிருக்கிறது. பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப் பட்டோர், முஸ்லிம்கள், பார்ப்பனர், ஆங்கிலோ - இந்தியர் உள்ளிட்ட கிறிஸ்துவர்கள் தொகை விகிதாச்சா ரம் சுமாராக 17:4:2:1:1 ஆகும். பார்ப்பனரல்லாதா ரென்போரில் தாழ்த்தப் பட்டோரைத் தவிர்த்து பிற்பட்ட வகுப்பினரனை வரும் அடங்குவர். பிற்பட்ட வகுப்பினர். பிராமணரல்லா தார் என உட்பிரிவு வகுக்கவேண்டியது முறையே யாகும். இது வரை அளிக்கப்பட்டுவந்த முக்கியத்துவங்கள் ரத்து செய்யப்பட்டு, ஒவ்வொரு வகுப்பும் தனது மக்கள் தொகைக்கேற்ப விகிதாச்சாரம் பெற்றுக் கொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யவேண் டிய காலம் நெருங்கிவிட்டது. இந்திய சர்க்கார் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இப்போதுள்ள 81/8 சத விகித விகிதாச்சாரத்துக்குப் பதிலாக
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/113
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
