தகுதியும் திறமையும் 109 யவும், 'கம்யூனல் ஜி. ஒ. 'வின் வகுப்பு விகிதாச் சாரம் தவிர்க்கமுடியாத நிலையில் திருத்தியமைக் கப்பட்டது. திருத்தத்தில், மொத்த பதவிகள் 12 என்பதற் குப் பதில் 14 என்று கொள்ளப்பட்டு அந்த 14 பதவிகளும், பார்ப்பன ரல்லாதாருக்கு 6 பின்னனிப் பார்பனரல்லாதாருக்கு 2 பார்ப்பனர்கட்கு ஆதித் திராவிடர்கட்கு முஸ்லீம்களுக்கு கிருஸ்தவர்கட்கு (ஆங்கிலோ இந்தியர் உள்பட) 2 2 1 1 என்ற விகிதத்தில் பங்கிட்டு அளிக்கப் பட்டன. இந்த விகிதாச்சாரமும் பல வகுப்புக்களையும் சார்ந்த மக்கள் தொகை விகிதப்படி அமைய வில்லை. பார்ப்பனர்கள் தங்கள் உரிமைக்கு மேல் பல பல மடங்காகப் பெற்றிருந்த விகிதத்தைக் குறைத்து அவர்கள் ஆதிக்கம் மேலும் வளரு வதைத் தடுக்கவும் இதில் வழிசெய்யப்படவில்லை. இத்திருத்தம், வகுப்பு விகிதாச்சார முறை யைச் சிறிது மாற்றியமைத்த போதிலும், 'கம்யூ னல்ஜி. ஓ'வின் அடிப்படைக் கொள்கையைக்கூட அதுவரை ஏற்றுக்கொள்ளாத காங்கிரஸ் கட்சி, கட்சிக்குள்ளேயே பார்ப்பனர்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும், அதனை ஏற்றுக் கொண்டு விட்டதற்குச் சான்றாக அமைந்தது. பலமான
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/115
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
