பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வகுப்புரிமைப் போராட்டம் பல சமூகங்களின் முன்னேற்றத்திற்கும், உரி மைக்குக்கு ஏற்ற, 'கம்யூனல் ஜி.ஓ.'வினை அவ சியமான அளவு திருத்தியமைக்க வேண்டுமென நாட்டின் பெருங்குடி மக்கள் வற்புறுத்தி வந்ததா லேயே, காங்கிரஸ் கட்சி மந்திரி சபை, இந்த முற் போக்குத் திருத்தத்தை எதிர்ப்புக்களுக்கிடையி லேயும் நிறைவேற்ற முன் வந்தது. பார்ப்பனரின் பதைப்பு ! ஆனால் ஆதிக்கவாதிகளோ, இத்திருத்தத்தை முழு பலத்தோடும் எதிர்க்கலானார்கள். 'பிராமண சேவாசங்கங்களும்' அவர்தம் மாநாடுகளும் விரிந்து கட்டித் தோள் தட்டித் தொடை தட்டும் வாயாடி களின் வம்புமடங்களாயின. இத்திருத்தம் வருவதற்கு முன்பே, "பழைய ஜஸ்டிஸ் கட்சி”யின் ஆத்மா இன்றைய காங்கிரஸ் மந்திரி சபைக்குள் புகுந்து கொண்டுவிட்டது. என்று 'சுதந்தரா'வும், வகுப்புவாரி நியாயமான முறையால், திறமையற்றவர்கள் பதவிக்கு வந்து விடுகின்றனர் ' என்று மற்றொரு ஏடும் ஓலமிட் டன. இப்பொழுதோ, தூற்றல் துந்துபி வான ளாவிற்று. 66 "பிராமணர்களுக்கு மட்டும் உத்தியோகமில் லையா? அவர்கள் தகுதி, திறமை பாழாவதா? இது தான் காங்கிரஸ் ஆட்சியா?" என்ற முகாரியில் தொடங்கி, "இந்தக் காங்கிரஸ் ஆட்சியைவிட ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியியே மேல்," ஆளுகின்ற இராமசாமிக்கு தாடி ஒன்றுதான் குறைச்சல்" 'வகுப்புத்துவேஷிகளா மந்திரிகளாக இருப் பது?' என்று சபித்திடும் அளவுக்குக் கொக்கரித் தனர்.