பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதியும் திறமையும் 111 பலர், 1948 மே மாதத்தில் நடைபெற்ற "முற்போக் குப் பார்ப்பனர்கள் மாநாட்டிலே "யே கடுவிஷம் கக்கினர் "புல்லேந்தும் மரபில் வந்த நாம், சமயம் நேர்ந்தால் வாள் ஏந்தும் திறமை யுடையவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டவேண் டும் " என்றும், "சமயம் நேர்ந்தால் அராபியாவில் யூதர்கள்' நடத்தும் செயலை, நடத்தும் செயலை, பிராமணர்கள் இங்கு நடத்திக் காண்பிக்கலாம்" என்றும் தமது இயல்புக்கு மாறாக பேசித்தீர்த்தனர். தம்மைத் தாமே- புல்லேந்தும் மரபு என்று ஒப்புக்கொண்டு அதன் பின்னர் 'வாளேந்துவோம்' என்று கூறு வது, ' எப்படியெல்லாம் வாளேந்துவர், என்ன வெல்லாம் செய்வர் என்று எண்ணிப் பார்ப்பவர் கட்கு விலா நோகச் சிரிப்புத்தான் வரும். 'யூதர் களைப்போல் இருக்கிறார்களே' என்று மற்றவர் கள் இவர்களை பயத்தோடு காணும் நேரத்தில், தம்மைத்தாமே 'யூதர்' என்று அவர்கள் அழைத் துக்கொண்ட தெளிவற்ற தன்மை, நம்மைக் கை கொட்டி சிரிக்கத்தான் செய்கிறது. என்றா லும், அவர்களின் எதிர்ப்புணர்ச்சி, அந்த அளவு, கரைபுரண்டு வழிந்தோடிக் கொண்டிருந்தது என் பது இதிலிருந்து தெளிவாகின்றது. த உண்மையில், 'கம்யூனல் ஜி ஓ. ' வில் செய் யப்பட்ட திருத்தத்தால், பார்ப்பனர் உரிமை ஏதே னும் பறிக்கப்பட்டதா ? அநீதி ஏதேனும் இழைக் கப் பட்டதா ? என்று எண்ணிப் பாருங்கள். 'கம்யூனல் ஜி. ஓ.' திருத்தப்படு முன்பும் பின் பும் ஒவ்வொரு வகுப்பும் பெற்ற விகிதாச்சாரப் பங்கு இதுவாகும்.