114 வகுப்புரிமைப் போராட்டம் கள், பார்ப்பனரல்லாதார் ஆகியோரைப் போல் 6-மடங்கும் பதவி பெறும் வாய்ப்பு (சந்தர்ப்பம்) அளிக்கப் பட்டனர். பின்னணிப் பார்ப்பனரல் லாதாரோடு மட்டும் ஒப்பிட்டால், ஏறத்தாழ 12- மடங்கு பதவி பெறும் வாய்ப்பு அளிக்கப் பட்ட னர். இவ்வளவும் எந்நிலையில்? இதற்கு முன்பே அர சாங்க அலுவலகங்களிலெல்லாம் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு, மற்ற வகுப்பார்கட்கு இடமில்லா மலும், இடம் கிடைத்தாலும் நிலைக்க முடியாமலும் செய்து வருகின்றனர் என்று பொதுமக்கள் உணர்ந்துகொண்ட நிலையில்தான் வழங்கப்பட் டது. ஆரியச் சிரேட்டர்களுக்கு மட்டும் சத்திரத் துக் கதவு திறக்கப்படுவதைப் போலத்தான், அர சாங்கப் பதவிகட்கான வாயிலும், மற்ற வகுப்பார் கட்குத் திறக்கப்பட்டதைவிட, ஆறுமடங்கு அகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. என்றாலும், விருந்துண்ட தடியன், தன் கை வலிவை விருந்தளித்தவரிடத்திலேயே காட்டி மிரட் டுவதைப் போன்ற செயலில், சலுகை பெற்றவர் கள், முறையின்றி நடந்து கொள்ளலானார்கள். "பேராசைக் காரனடா பார்ப்பான்." என்று பாரதி பாடினாரே அந்தப் பரம்பரைப் பண் பாட்டை இழந்துவிட அவர்கள் என்ன ஏமாளி களா? - பின்னணியினர் நிலை மற்றும் இத் திருத்தத்தால், பின்னணிப் போதுமான பயன் பார்ப்பன ரல்லா தாருக்குப் விளையவில்லை என்பதற்குச் சட்டசபை நிகழ்ச் சியே சான்று தருகின்றது.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/120
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
