பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதியும் திறமையும் 115 28-2-48 அன்று கூடிய சென்னை சட்டசபை யில் "வகுப்பு விகிதாச்சார உத்தரவில்" செய்யப் பட்ட திருத்தத்தைப் பற்றிய கேள்வியைத் தொடங்கிய தோழர். ஆர்.வி.சாமிநாதன், எம். எல்.ஏ. அவர்கள் "பிற்போக்கு வகுப்புக்களுக்கென்று 14-ல் 2 டங்கள் மட்டும் ஒதுக்கியிருப்பது போதுமான தாகுமா?" என்று கேட்டுள்ளார். பதிலளித்த அமைச்சர் சுப்பராயன் அவர் கள், "இடங்கள் ஒதுக்குவதில், கல்வித் தகுதி உட் பட பலவற்றைப் பற்றி ஆலோசனை செய்யப்பட் டன." என்று கூறியுள்ளார். அதை ஒட்டி, தோழர் பரமாநந்த ராயர் எம். எல். ஏ. அவர்கள், "பிற்போக்கு வகுப்பு என்ற பிரிவில் சேர்க்கப் பட்டுள்ள. 147-வகுப்புக்களுக்கு 2 இடங்கள் மட் டுந்தானே ஒதுக்கப்பட்டுள்ளன?' என்று கடாவி யுள்ளார். அடுத்தாற்போல் தோழர் எம். ஏ. சலாம் எம். எல். ஏ. அவர்கள், 100க்கு 3-பேராக உள்ள பார்ப்பனருக்கு 2. இடங்களும், 100க்கு 8-பேராக உள்ள முஸ்லீம்களுக்கு 1-இடமும் அளிக்கப்பட் டிருப்பது ஏன்? என்று கேட்டுள்ளார். "பார்ப்பனர்கள் பரந்த இந்து சமுதாயத்தி லுள்ளவர்கள், அத்துடன் தகுதி மிக்க திறமை சாலிகள்" என்று, தம் கட்சியின் தவறை மறந்து, தாம் யார் என்பதையும் மறந்து பதிலத்துள்ளார் அமைச்சர் சுப்பராயன். 'பரந்த சமுதாயத் திலுள்ளவர்கள்' என்று குறிப்பிட்டபோது, அந்தப் பரந்த சமுதாயத்தில் அவர்கள் தனித்தே வாழ்கின்றனர் என்பதையும், மற்ற மக்களை எதன் பெயராலோ அடிமைப் படுத்தி