பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரத்துசெய்ய தகுதியும் திறமையும் 117 வேண்டுமென்று சர்க்காரை வற் புறுத்துகிறது' என்பதே அத் தீர்மானம். இத் தீர்மானம் காங்கிரஸ் பார்ப்பனரல்லாதா ரின் எதிர்ப்பினாலேயே, மண் கவ்வச் செய்யப்பட் டது. அதிலிருந்தே, இனி மாகாணச் சட்ட சபையை நம்பினால் பயனில்லை, மத்திய சட்டசபை டில்லி சர்க்கார் ஆகியவற்றின் மூலமே தம் நோக் கத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்கள் பார்ப்பனர்கள். மேலும், மாகாண மந்திரி சபையே பார்ப்பன ரல்லாதாரின் பெரும்பான்மை பலத்தோடு திகழ்ந் ததால், பார்ப்பனருக்கு டில்லிக்குக் காவடி எடுப்ப தைத் தவிர, தம் சூழ்ச்சிக்கு வேறு வழி இல்லாது போயிற்று. அவர்களது, சுயநலக் காவடியும் பல னளிக்காமற்போகவில்லை. டில்லி தாக்கீது 1948 மே திங்களில் இந்திய சர்க்கார், எல்லா மாகாண மந்திரிசபைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அரசாங்க உத்தியோக நியமனங்களில், இந்து மதத்தின் கிளைகளுக்குள் (சாதிப் பிரிவுகளுக்குள்) பேதங்காட்டுவது தற் போதைய அரசாங்கக் கொள்கைக்கு மாறாக வேற்றுமையைத் தோற்றுவிப்பதாகும். மாகாண அரசாங்கங்கள், உத்தியோக நியமனங்களில் சாதிப் பாகுபாடுகளை இதுவரை கைக்கொண்டி ருந்து வந்தாலும், இனி, செய்யப்படும் நியமனங்களில் எந்த மாகாணமும் சாதிப்பாகுபாடுகள் காட்டக்கூடாது என்பதோடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தவிர்த்து மற்றவற்றை எல்லா இந்துக்களுக்கும் பொதுவாகவே வழங்க வேண்டும் " என்று அவ்வறிக்கை கூறிற்று. இவ்வறிக்கை -மாகாண அரசாங்கத்திற்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டவுடனேயே, திரா