பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வகுப்புரிமைப் போராட்டம் விடர் கழகமும், மற்றும் சில பொது நலக் கழகங் களும், இதை எதிர்த்துத் தீர்மானங்கள் நிறை வேற்றியதோடு, சமூக நீதியை நிலை நாட்டுவதில் மாகாண அரசாங்கம் உறுதியோடு பணியாற்ற வேண்டும் என வற்புறுத்தலாயின. ஓமந்தூராரைக் கவிழ்க்கும் முயற்சி அவ்வமயம், மாகாண முதலமைச்சராக விளங் கிய ஓமந்தூர் இராமசாமி அவர்கள், இது குறித்து மிகத் தெளிவோடும் உறுதியோடும் நடந்து கொண் டது பாராட்டத் தக்கதாகும். "இவ்வறிக்கை குறித்து நாம் மிகவும் முன் னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்; இல்லாவிடில் ஆபத்து ஏற்படும்' என்று அவ்வம யம் அவர் தெரிவித்தார். மேலும், தென்னாட்டின் சமூக நிலையில் உள்ள உயர்வு தாழ்வு வேறுபாடு கள் காரணமாகச் சென்னை அரசாங்கம், இந்த வகுப்புவாரி உத்தரவைக் கைவிடுவதற்கில்லை என்ற உண்மையை மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறித் தெளிவு படுத்தவும் ஓமந்தூராரும் அவரது மந்திரி சபையினரும் தவறவில்லை. எனவேதான், மத்திய சர்க்காரையே, தம் தந்திரத் திட்டத்துக்குத் தாளம்போடச் செய்தா லும், மாகாண மந்திரிசபையைத் தம் மனம் போன வண்ணம் ஆட்டிப்படைக்க முடியாததைக் கண்ட பார்ப்பனத் தலைகள், இந்த மந்திரி சபையையே,எப்படியேனும் ஒழித்துக் கட்டியாக வேண்டும் என்று தீவிரமாக முனையலானார்கள். அதிலும் முக்கியமாக, உள்ளத் தூய்மையும் உறுதி யும் கொண்ட உத்தமர் ஓமந்தூராரை முதலமைச் சராக வரமுடியா தபடி- தலைவர் தேர்தலிலேயே ஒழித்துக்கட்டக் கங்கணம் கட்டிக்கொண்டனர்.