வழக்கு விவரம் 119 "வானை வில்லாக வளைக்கவும், மண்ணைக் கயி றாகத் திரிக்கவும்" தந்திர மந்திரம் (இயந்திரமல்ல ) கற்ற கூட்டம், எப்படியோ வெற்றி பெற்றது 1949-ல்! ஓமந்தூர். இராமசாமி தலைமைப் பதவியினின் றும் விலகிக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படுத் தப்பட்டது. திருவாளர் குமாரசாமி ராஜா அவர் கள் தலைவராகிப் புதுமந்திரி சபையை அமைத் தார். அத்துடன் பார்ப்பனர்கள் ஓய்ந்துவிடவில்லை. அவர்கள் இயல்பல்லவே அது ! திருவாளர் ராஜா முதல் மந்திரியாக வீற்றிருக் கும் இக்காலத்தில்தான், பார்ப்பனர்களின் நெடு நாளைய எண்ணம், அபிலாஷை, அவர்தம் கூட்டு முயற்சியில் உருவான புதிய அரசியல் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு வடிவெடுத்து, உயர் நீதிமன்றத்தில் நுழைந்து வெற்றிக் களிப் போடு வெளிவந்த 'காட்சியை' நாம் காண நேரிட் டது. வழக்கு விவரம். சென்னை - மருத்துவக் கல்லூரியிலேயும், (Medical college) பொறியியல் கல்லூரியிலேயும் (Engineering college) தம்மைச் சேர்ப்பதில், சென்னை அரசாங்க வகுப்புவாரி உத்தரவு குறுக் கிடக் கூடாதென்று, முறையே திருமதி செம்பகம் துரைசாமி, திரு. சி. ஆர். சீனிவாசன் ஆகிய இரு வரும் சென்னை உயர் நீதி மன்றத்தில் (Mandamus pettitions) மனுச்செய்து கொண்டனர். தாம் பார்ப்பனர்களாக இருப்பதால் தமக்கு அக்கல் லூரிகளில் இடம் கிடைக்காமற் போகலாமென் றும், எனவே, வகுப்புவாரி உத்தரவு குறுக்கிட
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/125
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
