பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 வகுப்புரிமைப் போராட்டம் லாகாதென்றும், அவ் விண்ணப்பங்களில் குறிப் பிட்டிருந்தனர். அவர்கள் சார்பில் முறையே முன்னாள் நீதிபதி. திரு.வி.வி.சீனிவாச ஐயங்காரும், முன்னாள் அட் வகேட் ஜெனரல் திரு. அல்லாடி. கிருஷ்ணசாமி ஐயரும் வாதிட்டார்கள். சர்க்கார் சார்பில், அட்வ கேட் ஜெனரல் திரு.குட்டி கிருஷ்ண மேனன் வாதிட்டார். தலைமை நீதிபதி திரு. பி. வி. இராசமன்னார், நீதிபதிகள், திரு. விஸ்வநாத சாஸ்திரி, திரு சோம சுந்தரம் ஆகிய மூவர் முன்னிலையிலுமே (Full Bench) இம்மனுக்கள் விசாரிக்கப் பட்டன. விண்ணப்பதாரர்கள், 1950-ஜனவரி 26-ல் புது இந்திய அரசியல் சட் டம் நடைமுறைக்கு வந்துவிட்டபின், அந்தச் சட் டத்தில், குடிமக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளுக்கு சென்னை அரசாங்கத்தின் வகுப்பு வாரி உத்தரவு முரணாக இருக்கிறதென்றும், கல் லூரியில் சேர்வதற்குத் தாங்கள் செய்துள்ள விண் ணப்பங்கள் அவற்றின் தகுதிகளின்மீதே கவனிக் கப்படவேண்டும் என்றும், தங்கள் மனுக்களில் குறிப்பிட்டிருந்தனர். அவற்றின் மீது தீர்ப்பளித்த தலைமை நீதிபதி திரு. இராசமன்ஓர் அவர்கள் கூறிய தீர்ப்பின் சுருக்கம் இதுவாகும் : "மெடிக்கல் கல்லூரியில் 330 இடங்களும், இன் ஜினீயரிங் கல்லூரியில் 359-இடங்களும் உள் ளன. அவற்றுள், வெளி அரசாங்கங்களிலிருந்து வருபவர்கட்கும், சென்னை அரசாங்கத்தால் தெரிந்தெடுக்கப் படுபவர்கட்கும் ஒதுக்கப்பட்ட இடங்கள் போக மிச்சம் உள்ள இடங்கள் வகுப்பு