வழக்கு விவரம் 121 வாரிப் பிரதிநிதித்துவத்தின்படி அளிக்கப்படு கின்றன. இவ்விதம், வகுப்புவாரியாக மாணவர்களைக் கல்லூரியில் சேர்ப்பது தனிப்பட்டவர்களின் உரிமையைப் பாதிக்கிறதென்று வாதிப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஒருவர், இந்த அரசாங்கத்தின் குடிகளுள் ஒரு வராகவே கொண்டு உரிமையளிக்கப்பட வேண்டு மேயொழிய, அவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்காக அவருடைய தனிஉரிமை பாதிக்கப்படலாகாது. இந்திய அரசியலின். 15-வது கட்டளைப்படி, இந்த வகுப்புவாரி உத்தரவு - ஒருகுறிப்பிட்ட வகுப் புக்குப் பாதகமாகவே வேற்றுமை செய்கிறது. ஒரே கல்லூரியில் இடம்பெறுவதற்கு ஒரு அரிஜன மாணவரைவிட ஒரு பார்ப்பன மாணவர் அதிக மார்க்கு (தகுதி) பெறவேண்டுமென்று ஏற்படுவது ஒரு வகுப்புக்கும் மற்றொரு வகுப்புக்கும் ஏற்றத் தாழ்வு காட்டுவதும், வித்தியாசம் புகுத்துவது மாகத்தான் முடியும். எனவே விண்ணப்பதார ருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிப்பது தான் நியாய மாகப் படுகிறது. அரசாங்கக் குடிகளுள் முன்னேற்ற மடைய சக்தியற்றவர்கள் பொருட்டு அரசாங்கம் கவலை (முயற்சி) எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் 46-வது கட்டளை, சர்க்கார் அறிவிக்கும் கொள்கையேதவிர கட்டாயம் கடைப்பிடிக்கவேண் டிய சட்டவிதியல்ல. குடிகளுக்குச் சமத்துவமளிக் கப்பட வேண்டுமென்று அரசியலில் பல் களில் வற்புறுத்தப் பட்டிருக்கிறது. சில இடங் களில் பிற்போக்கு வகுப்பினருக்குத் தனிச் சலு கைகள் காட்டியும் கட்டளைகள் வகுக்கப்பட்டிருக் இடங்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/127
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
