பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வகுப்புரிமைப் போராட்டம் கின்றன. அவற்றின்படி, உத்தியோகங்களில், ஆதி திராவிடர்கட்கும், பிற்போக்கு வகுப்பினருக்கும் சலுகைகள் அளிக்கலாம். ஆனால் கல்வித் துறை யில், யாருக்கும் எவ்வித வேறுபாடும் காட்டலா காது. அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள், 29-வது கட்டளையைத் தனியாக வகுத்திருக்கின் றனர். 46-வது கட்டளை 15-வது, 29-வது கட்டளை களின் உரிமைகளில் தலையிடவே முடியாது. சமூக அநீதியிலிருந்து சக்தியற்ற வகுப்பின ருக்குப் பாதுகாப்பு அளிக்க, இந்த வகுப்புவாரி உத்தரவை வகுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதிக மார்க்குகள் பெற்றிருந்தும், ஒரு குறிப் பிட்ட வகுப்பினர் என்பதற்காக ஒருவரைக் கல் லூரியில் சேர்க்காமல் இருப்பது நீதியாகுமா? அர சியலின் படி, குடி.மக்கள் ஒவ்வொருவரும் சமசந் தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். எனவே, விண்ணப்பதாரர்கள், கல்லூரியில் சேரக்கொடுத் துள்ள விண்ணப்பங்களை அவற்றின் தகுதிகளின் பேரிலேயே பரி சீலனை செய்யவேண்டும் என்றும், மத, இன, சாதி, மொழி வேற் றுமைகள் அதில் காட்டக்கூடா தென்றும் நான் முடிவு செய்கி றேன். அந்தத் 'தகுதி' எப்படி இருக்கவேண்டுமென்றே, அதை எவ்வாறு கவனிக்கவேண்டுமென்றே சொல்வது நம்மைச் சார்ந்ததல்ல 37 அடுத்துத் தீர்ப்பளித்த, நீதிபதி திரு. விசுவநாத சாத்திரியின் தீர்ப்பின் சுருக்கம் இதுவாகும்: "குறிப்பிடப்பட்ட, வகுப்புவாரி பிரதிநிதித் துவ உத்தரவு வகுப்புத் துவேஷத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கிறது. தனிப்பட்டவர்களின் உரிமையில் அரசாங்கம் தலையிட்டு ஏதாவது செய் யாமல் இருக்க வேண்டும் என்றே, அரசியலை